Ad Code

Recent Posts

மேஜர் பாலா (ஒளிநிலா) வீர வரலாற்று நினைவுகள்


மேஜர் பாலா (ஒளிநிலா)
பாலசுப்பிரமணியம் ரஜனி
அல்வாய் வடக்கு, 
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 17.10.1973 
வீரச்சாவு: 04.12.1997

வீரச்சாவடைந்த மாவட்டம்: வவுனியா

வீரச்சாவு நிகழ்வு விபரம்: மன்னக்குளம் பகுதியில் முன்னேறிய ஜெயசிக்குறு சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவு

துயிலுமில்லம்: முள்ளியவளை 
துயிலும் நிலை: வித்துடல் 

“என்னிடம் இருக்கிறது எனக்குப் போதும்” 

சண்டைக்களத்தில் ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் காற்சட்டைப் பையில் மடித்து வைத்த நாளிதழ் துண்டை எடுத்து வாசித்துக்கொண்டிருப்பார்.

உணவுப் பொதி செய்து வரும் நாளிதழ், காற்றிலே பறந்து வந்து ஒதுங்கும் தாள்கள் என வாசிக்கக்கூடிய எதுவும் இவரிடமிருந்து தப்பாது. எடுத்துக் கவனமாக கசங்காமல் மடித்து காற்சட்டைப் பைக்குள் வைத்துவிடுவார்.

இவருடைய போராட்ட வாழ்க்கை முறை மிக மிக எளிமையானது. எந்த அளவுக்கு எளிமையானது என்றால், போராளிகளுக்கென வழங்கப்படும் உடைகள் மற்றும் பிற பொருட்கள் அவருக்கும் வழங்கப்படும் போது அதைத் திருப்பிக் கொடுத்து விடுவார் அல்லது மறுத்துவிடுவார்.

“என்னிடம் இருக்கிறது எனக்குப் போதும்” எனச் சுருக்கமாகப் பதில் கூறிவிடுவார்.

தன்னிடமிருக்கும் ஒரே ஒரு உடையையே துவைத்துத் துவைத்து, காய்ந்த பிறகு அணிவார். கிழிந்திருந்தால் தைத்துத் தைத்து அணிவார்.

தன்னுடைய தனிப்பட்ட தேவைக்காக எதையுமே எப்போதுமே அவர் கேட்டதில்லை.

கையில் ஆயுதம் இருந்தது, ஆனால் ஒரு துறவி போல வாழ்ந்தார். ஒரு துறவற வாழ்க்கையை வாழ்வது போலவே களத்தில் இருந்தார்.

வாசிப்பை மிகத் தீவிரமாக நேசித்தார். மற்றவர்கள் உரையாடி கொண்டிருக்கும்போதும் விளையாடும் போதும் அவர் வாசித்துக் கொண்டிருப்பார்.

'ஜெயசிக்குறு' சமருக்காக அமெரிக்காவின் 'கிரீன் பெரட்' சிறப்புப் படைகளிடம் பயிற்சி பெற்ற இலங்கை இராணுவத்தின் சிறப்புப் பிரிவை எதிர்கொண்ட இடம் மாங்குளம் மன்னங்குளம் பகுதி. இந்த நேரடிச் சமரில் மேஜர் பாலா  (ஒளிநிலா) அவர்கள் வீரமரணம் எய்தினார்.

மேஜர் பாலா  (ஒளிநிலா) மாலதி படையணி.

புலிகள் எப்படிப் போராடினார்கள் என்று தேடத் தேட அதிசயங்களும் ஆச்சயரியங்களும் வரிசை கட்டி வந்து நிக்கிறது வரலாறாய்.


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.