Ad Code

Recent Posts

மேஜர் வண்ணன் (ரசிகன்) வரலாற்று நினைவுகள்

மேஜர் வண்ணன் (ரசிகன்)

ராஜரட்ணம் விஜிகரன் 

சுண்ணாகம், யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 07.07.1975

வீரச்சாவு: 04.04.1996


வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்


வீரச்சாவு நிகழ்வு விபரம்: அளவெட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவு


துயிலுமில்லம்: கனகபுரம்


அன்பின் அப்பா அப்பா அண்ணன் அக்கா அறிவது நீங்கள் நலமுடன் வாழ எம் தலைவனின் ஆணையில் மலரப் போகும் தமிழீழம் வழி காட்டும் என உறுதி கூறுகிறேன்.


மேற்படி விசயத்திற்கு தேரடியாகவே வருகின்றேன். அம்மா எங்களது போராட்டம் 30, 35 வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போராட்டம் எதற்காக நடந்து கொண்டிருக்கிறது. என்பது மிக முக்கியமாக தெரிந்து இருக்க வேண்டும். 


இந்த போரட்டமானது எமது மக்கள் சுதந்திரமாகவும் நின்மதியாகவும் கௌரவமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இன்று போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்திற்கு எமது தலைவர் வழிகாட்டிக்கொண்டிருக்கிறார். இந்த வழிகாட்டலின் கீழ் நின்று தமிழீழம் மலரவேண்டும் என்று உறுதியோடு போராடி மடிந்தவர்கள் தான் இந்த  மாவீரர்கள். இந்த மாவீரர்களின் வரிசையிலும் இந்த மக்களின் விடிவிற்காக மடிவதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.


அம்மா இந்த மடல் உங்களுக்கு கிடைத்ததும் நாள் வீரச்சாவு அடைந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகியிருக்கும் நினைக்கின்றேன். இந்த மடலை வாசித்த பின்பு மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.


அம்மா நீங்கள் எனக்கு செய்ய வேண்டியது என்னவென்றால் எமது போராளிகளை ஊக்கப்படுத்தும் முகமாக செயற்படவேண்டும். போராளிகளுக்கு உணவு கொடுக்கவும் உங்களுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை போராளிகளை நன்கு உபசரிக்கவும் மற்றும் எமது குடும்பம் போராளி குடும்பம் என இயக்கத்திலிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. நீங்கள் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை பேராளிகளை சாப்பிட வையுங்கள்.அவர் தான் தமிழீழம் பெற்றுத் தரப் போகிறார்கள். அம்மா ஒவ்வொரு தமிழ் மக்களும் தமிழீழத்திற்காண்டி எவ்வளவு கஸ்டம் படுகிறோமோ அவ்வளவு விரைவில் தமிழீழத்தை விரைவில் பெற்றுத் தருவார் எம் தலைவர். தலைவரை நம்புங்கள் நிச்சயம் வெற்றி கிட்டும் இது உறுதி கூறுகிறேன்.


அம்மா தான் எல்லோருக்கும் கடிதம் எழுத நேரம் இல்லை. ஆகையால் இதை எல்லோருக்கும் காட்டவும். எல்லோரும் நலமாக வாழவும்.


04-04-1996 அன்று, ஆக்கிரமிக்கப்பட்ட யாழ் குடாநாட்டில் அளவெட்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கெதிரான சமர் ஒன்றில் வீரச்சாவடைந்த மேஜர் வண்ணன் அல்லது ரசிகன் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் ஊடுருவிச் செல்ல முன் தனது பெற்றோருக்கும். போராளியான தனது அக்காவிற்கும் எழுதிய இறுதிக் கடிதம்.(அக்காவிற்கான கடிதம் உள்ளே)



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code