Ad Code

Recent Posts

மேஜர் பாரதியின் வீர வரலாற்று நினைவுகள்


மேஜர் பாரதி
விஸ்வலிங்கம் சத்தியபாமா
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 20.12.1965
வீரச்சாவு: 07.06.1992

வீரச்சாவடைந்த மாவட்டம்: மன்னார் 

வீரச்சாவு நிகழ்வு விபரம்: சிறுநாவற்குளம் பகுதியில் வழிதவறி சிறிலங்கா படை காவலரண் அருகே சென்றபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு 

துயிலுமில்லம்: எள்ளங்குளம் 

வடமராட்சியில் உள்ள கல்லுவத்தின் செம்பாட்டு மண்ணில் இருந்து புதிய புறம் பாடப்புறப்பட்ட வீரவேங்கை இவள்.

அந்நிய ஆதிக்கம் எம்மண்ணிலே விளைத்த கோரப்பதிவுகளைக் கண்டு கொதித்தெழுந்து....

தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்த மாவீரர் வரிசையிலே இன்று இவளின் பெயரும் .... பாரதி!

இவள் குடும்பத்தில் ஒரே பிள்ளை - செல்லப்பிள்ளை,தங்கள் உயிரினும் மேலாக பெற்றோரால் நேசிக்கப்பட்டவள்; போஷிக்கப்பட்டவள்.

வறுமையின் கோரப்பிடி இவளது குடும்பத்தை பாதித்தாலும் அது அவர்களது இதயத்தைப் பாதிக்கவில்லை.

எந்த விடயத்திலும் ஆற்றலும், அறிவும் பெறத்தக்க வகையிலே பெற்றோரால் வளர்க்கப்பட்டாள்.

பாரதி தன் தாயை மிகவும் நேசித்தாள், அதனால் தான் அவன் தன் தாய் நாட்டையும் மிகவும் நேசித்தாள்.

பெண்களை பூவையாக எண்ணி நகையாடிய காலத்திலே...

புலியாகி களமாடி இன்று காவியமாய் தமிழீழ வரலாற்றிலே நிறைந்து நிற்கிறாள்.

1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது பல்கலைக்கழகப் படிப்பை நிறுத்தி புலிகளின் போராட்டப்பாதையில் பாரதி தன்னை இணைத்துக்கொண்டாள்.

1987 ஆம் ஆண்டு மகளிர்படையணியின் 2-வது பயிற்சி முகாமுக்காக பெண் போராளிகள் தெரிவு செய்யப்பட்ட போது தானும் அதில் பயிற்சி பெற முடியவில்லையே என்று பாரதி. மிகவும் மனவேதனைப்பட்டாள். எல்லோரும் பயிற்சிக்குப் போனால் தளத்திலே நின்று வேலைகளைக் கவனிப்பதற்கும் ஆட்கள் தேவை. நீங்கள் தான் அப்பொறுப்பை ஏற்றுச் செய்ய வேண்டும் என்று லெப்.கேணல் திலீபன் கூறியதற்கிணங்க பாரதி தனது மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள். 

மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்து பெண்களை போராட்டத்துடன் இணைப்பதிலும், பெண்களது சமூக, பொருளாதார வாழ்வை மேப்படுத்தும் வேலைகளிலும் பாரதி ஈடுபட்டாள்

1987 ஆவணி 10 ஆம் திகதி இந்திய-தமிழீழ விடுதலைப் போரைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் சகல நிலைகளிலும் வளர்ச்சியைப் பெற்றுக் கொள்கிறது. வல்லர சொன்றுடன் மோதுகின்ற விடுதலைப் புலிகளின் தீரத்தையும் உலகம் கண்டு வியந்து நிற்கிறது.

குண்டு துளைக்காத நிலமென அங்குல நிலத்தையேனும் கண்டுகொள்ள முடியாத மணலாற்றுக் காட்டிலே புலிகளின் புதிய படையணிகள் வெகுவிரைவாக பயிற்சியைப் பெறுகின்றன . இக் காலகட்டத்தில் நடைபெற்ற மகளிர் பிரிவின் 4ஆவது பயிற்சி முகாமில்தான் பாரதி பயிற்சியைப் பெற்றுக்கொண்டாள்.

இவள் பயிற்சிக்குச் சென்ற அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன் ... இந்திய இராணுவம் இம்மண்ணிலே நிலை கொண்டிருந்த நேரம் அது. உண்பதற்கு தவிர வாயைத் திறக்கவே அஞ்சிய நேரம் அது. இந்நேரத்தில்தான் பாரதியை சந்திக்கிறேன்.

'பயிற்சிக்குப் போவோமா' என்று கேட்கிறேன். எனது கையை அன்புடன் பற்றியவள்:

"அக்கா இந்த முறையும் என்னை ஏமாற்றமாட்டியள் தானே கட்டாயம் அனுப்புவீர்கள் தானே" என்று கேட்கிறாள். அதேநேரம் எனது கைகளில் இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுகிறது.

ஆச்சரியத்துடன் பாரதியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கிறேன். 

"அக்கா நான் நல்ல தெளிவோடும் உறுதியோடும் இருக்கிறேன்'

இது பாரதியின் பதில். எனக்கு இன்னும் விடை பிடிபடவில்லை. இவள் ஏன் அழுகிறாள்? 

இப்பொழுது அவளது நாட்குறிப்பைப் பார்க்கும் பொழுது தான் அவள் அடிமனதின் ஆழத்தில் புதைந்திருந்த சோகம் தெரிகிறது.

வயிற்றுப்பாட்டிற்கே வழியின்றி வாடும் ஓர் எலும்புக் கூடு அவளின் தாய். தன் செல்ல மகள் திரும்பி வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்ற அந்த ஏக்கம் கண் முன்னே நிழலாடுகிறது.

அவளின் இறுதிக் கிரியைகளின் போது அழ மறந்து போய் ஒவ்வொரு போராளிகளதும் முகத்திலே தன் அருமை மகளை அடையாளங் காணத்துடிக்கின்ற அந்த தாயின் முன்னே பேசுவதற்கு வார்த்தைகளற்றுப் போகிறோம்.

பாரதி, வானதி, கஸ்தூரி இவர்கள் மூன்றுபேரும் ஒரே பயிற்சி முகாமிலே பயிற்சி பெற்றவர்கள், நெருங்கிய தோழிகள்.

இவர்கள் சையிலே இருந்த துப்பாக்கிகளுக்கு இருந்த வேகம் இவர்கள் கரங்களிலே இருந்த பேனாவுக்கும் இருந்தது.

ஒருபுறம் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகப் போர் தொடுத்தது இவர்களது துப்பாக்கி. இன்னொரு புறத்திலே சகல ஒடுக்கு முறை சக்திகளுக்கும் எதிராக மக்களை விழிப்படையச் செய்வதில் இவர்களது பேனா பெரும் பங்காற்றியது.

இந்திய இராணுவத்தை இம்மண்ணில் இருந்து விரட்டியடித்த துப்பாக்கி வேட்டொலிகளில் எல்லாப் போராளிகளையும் போல பாரதியின் துப்பாக்கியோடு சேர்த்து, அவளது பேனாவுக்கும் கணிசமான பங்கு இருந்தது.

1990ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் மாணவர் இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்த காலத்தில் பாரதி ஆற்றிய பணிகள் குறிப்பிடக் கூடியவை.

தமிழீழ மாணவ சமுதாயம் சரியான செல்நெறி ஒன்றுக் கூடாக வளர்த்துச் செல்லப்பட வேண்டும் என்பதில் பாரதி மிகுந்த அக்கறை கொண்டிருந்தாள்.

இந்நேரத்திலதான் மீண்டும் சிறிலங்கா தமிழீழ விடுதலைப் போர் ஆரம்பமாகியது. இப்போரிலே மாணவர்களை முழுமையாக பங்களிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை







விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.