Ad Code

Recent Posts

கடற்கரும்புலி மேஜர் அருணா/சுதா வீர வரலாற்று நினைவுகள்


கடற்கரும்புலி
மேஜர் அருணா/சுதா
குலசிங்கம் தவச்செல்வி 
மட்டுவில் வடக்கு, 
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.06.1969
வீரச்சாவு: 16.09.2001

வீரச்சாவு நிகழ்வு: யாழ்ப்பாணம் பகுத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு போறா பிரங்கிப் படகுகனை மூழ்கடித்த வீரச்சாவு

“நான் வெலிக்கடைச் சிறையில் இருக்கிறன்.”

என ஒரு கடிதம் வந்தது. குடும்பத்தாருக்கு பேர் அதிர்ச்சி. பெரும் மகிழ்ச்சி. 

சண்டையில் வீரச்சாவு என அறிவிக்கப்பட்டு, சமயக் கடமைகள் செய்து முடித்திருந்த ஒரு ஆளிடமிருந்து “நான் வெலிக்கடைச் சிறையில் இருக்கிறன்” என்று கடிதம் வந்ததால் குடும்பத்தாருக்குப் பெரும் மகிழ்ச்சி. 

புலிகளுக்கும் இது ஆச்சரியமான செய்தி. 

ICRC மூலம் மகளைப் பார்க்க, வெளிய எடுக்க முயற்சி செய்கிறார்கள் குடும்பத்தார். 

“உன்னை நாங்கள் திரும்ப அனுப்புவோம். ஆனால், நாங்கள் திரும்ப அனுப்பும் போது உன்னைப் பார்க்கிற யாரும் இனிமேல் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட நினைக்க கூடாது. அப்படியொரு நிலையில் தான் உன்னை அனுப்புபோம்.” என்றார்கள் வெலிக்கடைச் சிறைச் சிங்கள அதிகாரிகள். 

ஒவ்வொரு முறையும் மின்சாரத் தண்டனை வழங்கும் போதும் இந்த வார்த்தைகளைக் கூறித்தான் தண்டனை வழங்கினார்கள். உடலில் உள்ள நரம்புகள் சேதப்படும் வரை தண்டனை வழங்கினார்கள். 

நரம்புகள் செயல் திறன் அற்று, என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தன்னால் உணர முடியாத நிலையில், பாதிப் பிணமாக ஒப்படைத்தார்கள். 

தமிழர்கள் மேல் சிங்களவர்களுக்கு எவ்வளவு பழி வாங்கும் குணம் உள்ளது என்பதை இவரைத் திருப்பி அனுப்பிய முறையில் தெரிந்து கொள்ளலாம். அவ்வளவு சிதைத்து அனுப்பினார்கள். 

வன்னிக்கு வந்தவர் போராளி மருத்துவர்களால் நீண்ட கால பராமரிப்புக்குப் பின்னர் ஓரளவு குணமடைகிறார். 

தலைவருக்கு ஒரு கடிதம் வருகிறது. 
அதில், 

“நான் கரும்புலியாக விரும்புகிறேன்.” 

என எழுதப்பட்டிருந்தது. 

தலைவரும் அனுமதிக்கிறார். 

கரும்புலிகளுக்கான பயிற்சியில் ஈடுபடுகிறார். 

“உன் கதை முடிந்து விட்டது” என்று சொல்லி அனுப்பிய சிங்களத்திற்கு ஒரு பதில் சொல்ல விரும்பினார். 16.03.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் கரும்புலியாகத் தன் செய்தியைச் சொல்லுகிறார் மேஜர் அருணா. 


▪️அண்மையில் மட்டுவிலை சேர்ந்த ஒரு அண்ணரோடு தற்செயலாகக் கதைத்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. அருணா அக்காவின் கதையைக் கூற ஆரம்பித்த என்னை இடைமறித்து “ அவரின் படம் என் வீட்டின் வரவேற்பு அறையில் உள்ளது.” என்றார். 

அரியாத்தை, அருணா, அங்கயற்கண்ணி என நாம் வணங்க வேண்டிய ஆயிரமாயிரம் பெண் தெய்வங்கள் நம்மிடையே உள்ளார்கள்.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.