Ad Code

Recent Posts

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் வரலாறுகளை சுமந்து நிற்கும் நூல்

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்.

1984 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்டு, தமிழீழக் கடலன்னையின் மடியில் தவழ்ந்த ஒரு செல்லக் குழந்தை இது.

இன்று-சுமார் 10 வருடங்களின் பின்-தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு நிர்ணய சக்தியாக பெருவளர்ச்சி கண்டுவிட்டது.

எமது தாயகத்தின் புவியியல் அமைப்பைக் கருத்திற் கொண்டு கடற்புலிகளின் வளர்ச்சியிலும் அதன் செயற்பாட்டிலும் தலைவர் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

கடலிலே காவியம் படைப்போம்' என்ற உறுதிப்பாட்டைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயற்பட்டு வரும் கடற் புலிகளின் சாதனைகளும் தியாகச் செயல்களும் எமது போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை.

இச்சிறுநூலானது. கடற்புலிகளின் வரலாற்றுச்சுருககத்தையும் அதன் சாதனைகளையும் விளக்கி நிற்கின்றது. அத்துடன் கடற்புலிப் போராளிகள் சிலரின் வீரச்செயல்களையும், அவர்கள் புரிந்த உன்னத தியாகங்களையும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துகின்றது.

எமது இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' இதழில் கடற்புலிகள் தொடர்பாக, காலத்திற்குக காலம் வெளியாகியிருந்த கட்டுரைகளினது தொகுப்புடன், வேறுசில விடயங்களையும் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளது.

'விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்' பற்றிய ஒரு சிறந்த ஆவணமாக இத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது என்று கூறலாம்.



புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
வெளியீட்டுப் பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code