Ad Code

Recent Posts

மேஜர் லத்தீப் (ரவிநாதன்) வீர வரலாற்று நினைவுகள்

மேஜர் லத்தீப் (ரவிநாதன்) 
கந்தையா சண்முகநாதன் 
கிரான், மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 01.06.1963 
வீரச்சாவு: 14.02.1992

நிகழ்வு: மட்டக்களப்பு உன்னிச்சிசையில் சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு 

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் போராளிகளின் சுய விபரக்கோவையைப் புரட்டிப் பார்த்தால் கல்வி என்று குறிப்பிட்டிருக்கும் இடத்திற்கு நேரே பெரும்பாலும் எட்டாந்தரமோ அதற்குக் கீழேதான் காணப்படும். இவர்களது குடும்பங்கள் தங்கியிருக்கும் இடங்களை வீடு என்று சொல்ல முடியாது. தளபதி ஜோயிலிருந்து எல்லோரது நிலைமையும் அப்படித்தான். அவ்வாறான மிகக் கஸ்டமான குடும்பங்களிலொன்றிலிருந்து போராட்டத்திற்கு வந்தவன்தான் லத்தீப் கிரானைச் சேர்ந்த கந்தையா தம்பதியினரின் ஐந்து ஆண்பிள்ளைகளில் ஒருவன்தான் சண்முகநாதன் என்ற லத்தீப் இவனுக்கு நான்கு சகோதரிகளும் இருந்தனர். குடும்பத்தின் வறுமை நிலை இவன் தன் கல்வியை 7 ஆம் தரத்திற்கு மேல் தொடர அனுமதிக்கவில்லை. இயக்கத்தில் இணையும் வரை கூலி வேலைகள் செய்தான், தோட்டம் செய்தான், மிகக் கடுமையாக உழைத்தான்.

இவ்வாறாக மிகக் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பதனால் தான் மட்டக்களப்பு போராளிகள் ஒரு தாக்குதலுக்கு முப்பத்தைந்து தொடக்கம் ஐம்பது மைல்கள் வரை நடக்க வேண்டியிருந்தாலும் அலுத்துக் கொள்வதில்லை. ஆயுதங்கள், மேலதிக ரவைகள், முதலுதவிக்கான மருந்துகள், வழியில் எதிர்ப்படும் ஆறுகளைக் கடக்கத் தேவைப்படும் கயிறுகள் மற்றும் இன்னோரன்ன பொருட்களையும் சுமந்தபடி இவ்வளவு தூரம் நடந்து செல்வதென்றால் இலேசான காரியமல்ல.


சிங்கபுர, கள்ளிச்சை, வடமுனை போன்ற மிக நீண்ட தூரத்தில் உள்ள இடங்களுக்கு சென்று தாக்குதல் நடத்தும் போது யாராவது காயப்பட்டால் அது மிகப் பெரிய சிரமம், காயப்பட்டவர்களையும் சுமந்து கொண்டு எதிர்ப்படும் ஆறுகளையும் கடந்து வருவதற்கிடையில் சிலர் மரணிப்பர். தம்முடன் கூடி வாழ்ந்த, போராடிய நண்பனுக்காக நின்று அழக்கூட நேரமிருக்காது நடையின் வேகத்தை தளர்த்துவது ஏனைய காயப்பட்ட போராளிகளது உயி ருக் பங்கம் விளைவிக்கலாம். ஆகையால் வைத்தியம் செய்யக் கூடிய பாதுகாப்பான பகுதியைச் செல்லும் வரை அதே நடை இது அவர்களுக்குப் பழக்கப்பட்டு விட்டது. 


இப்படியான இடங்களுக்கு தாக்குதலுக்குச் செல்லும் போது தங்களுடன் லத்தீப் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். அவனது பகிடி-சேட்டைகளை ரசித்துக் கொண்டு வரும்போது நடையின் கஸ்டத்தை மறந்து விடுவார்கள். அதிலும் ஒருவரைப் போன்று பாவனை செய்தல், அவரைப் போலவே கதைத்தல் என்பன லத்தீப்புக்கு கைவந்த கலை. இயக்கத்தில் எவரையும் இவன் விட்டுவைப்பதில்லை எல்லோரைப் போலவும் கதைப்பான். ஆகவே நடந்தபடியே இவனது சேட்டைகளை ரசித்துக் கொண்டு செல்வார்கள்.


எதிரிகளின் எல்லையைத் தேடிச்சென்று நடத்தப்படும் இத்தாக்குதல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவ்வளவு கஸ்டத்துக்கு இடையில் தாக்குதல்கள் செய்வது பெரும்பாலும் வெளியில் தெரியாது. வெளியுல கத்தைப் பொறுத்தவரை 'கள்ளிச்சை வடமுனையில் 20 இரா ணுவம் பலி 20 ஆயுதங்கள் மீட்பு' இவ்வாறாகத்தான் செய்தி இருக்கும். இந்தத் தாக்குதல்கள் எல்லாம் இல்லாவிடில் சிங்களக் குடியேற்றத்தால் மட்டக்களப்பு கபளீகரம் செய்யப்பட்டிருக்கும். 


எமது போராட்டம் முனைப்படைய முன்னர் கடற்கரையோரமாக கல்குடா, புன்னக்குடா என்று சிங்கள மீனவக் குடியேற்றங்கள் மேற்குப் பக்கமாக வேப்பவெட்டுவான் வரை சிங்களக் குடியேற்றங்களின் கல்வாடி-ஏன் மட்டக்களப்பு நகர மரக்கறிச் சந்தை கூட குடியேற்றவாசிகளின் கையில்தான் இருந்தன. லத்தீப்பின் இவ்வாறான தாக்குதல்கள் இல்லாவிடில் மட்டக்களப்பு-திருமலை மாவட்டங்கள் கூட சிங்களக் குடியேற்றங்களால் துண்டாடப்பட்டிருக்கும்;


சிறிலங்காப் படைகளுடனான இரண்டாம் கட்டப்போர் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற கல்முனை முகாம் தாக்குதல்கள், அக்கரைப்பற்று காவல் நிலையத்தாக்குதல்கள் என்பன லத்தீப்பின் திறமையை வெளிப்படுத்தின. தும்பங்கேணியில் இவன் நடத்திய தாக்குதலுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட ஆறுகளைக் கடக்க வேண்டியிருந்தது. வெட்டவெளிப் பிரதேசமான மண்முனைத்துறைப்பகுதியில் கூட சிறிலங்காப் படைகள் மீது தாக்குதல் நடத்தினான், வெள்ளமோ வெளியோ புலிகளின் தாக்குதல் திறனைப் பாதிக்காது என்பதைப் புலப்படுத்தினான். எல்லா இடங்களிலும் ஆயுதங்களைக் கைப்பற்றினான்.


இவன் மிகவும் அதிசயமான முறையில் தப்பியது தொப்பிமலையில் இடம்பெற்ற இராணுவ முற்றுகையின் போதுதான். அந்த முற்றுகையை முறியடிக்கும் நோக்கில் இவன் 50 பேர் கொண்ட ஒரு குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்றான். இராணுவ அணியொன்றை அடித்து விரட்டிக் கொண்டிருக்கையில் ஏற்கனவே அப்பகுதியில் இராணுவத்தினர் அமைத்திருந்த வியூகத்தினுள் இவனது குழுவினர் சிக்கி விட்டனர். இராணுவத்தினரின் எரிகுண்டுகளினால் அப்பகுதியிலிருந்த இலுக்குப் புற்கள் பற்றி எரிந்தன எங்கும் நெருப்பு-புகை திசையே தெரியவில்லை. கடுமையான அந்தச் சண்டையில் இவன் தனது குழுவினரில் 22 பேரை இழந்தான். ஏனையோரை மிகச் சிரமத்தின் மத்தியில் காப்பாற்றிக் கொண்டு வந்தான். அந்த முற்றுகையில் மிஞ்சியது இவனது அணி மட்டுமே. ஆகாயத்தில் போர் விமானங்கள், தரையில் நெருப்பு, எதிரே இராணுவம், இவற்றுக்குள்ளால் இவனது அணி தப்பி வந்த விதத்தை இன்றும் கதைகதையாக கூறுகின்றனர் மட்டக்களப்புப் போராளிகள்.


தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வதைவிட இருப்பதைக் கொண்டு வாழ்வதே ஏற்றது என்பது இவனது நடைமுறை. தனது போராளிகளுக்கு அடிக்கடி எமது பொருளாதார நிலைமைகளைச் சுட்டிக்காட்டுவான். தன்னைப் போலவே வாழப் பழக்குவான். வீரத்திலும் தன்னைப் போலவே அவர்களையும் உருவாக்கினான். அனுபவமே சிறந்த ஆசான் என்பதற்கு இவனது வாழ்க்கையே உதாரணம். போராட்டத்தைப் பற்றி இவன் விளக்கும் விதத்தைப் பார்க்கையில் இவன் ஏழாம் வகுப்புப் படித்தவன் என்று யாருமே சொல்லமாட்டார்கள். ஒரு பேராசிரியராகவே இவன் விளங்குவான்.


14. 2 1992 அன்று ஆயித்திய மலை 6-ம் கட்டைப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கான ஏற்பாடுகளைச் செய்தவன் இவனே. தாக்குதலுக்குச் செல்லும்முதல் வழமைபோல் கலகலப்பாகவே இருந்தான். தங்களைச் சிரிக்க வைப்பது இது தான் கடைசித்தரம் என்பது தெரியாமல் அனைவரும் அவனது சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.


நாய் மாதிரிக் குரைப்பான். சோம்பலுடன் நாய் எப்படித் திரும்பிப் பார்ப்பது என்று அபிநயம் செய்வான். இவன் பயிற்சிக்காக வந்த காலத்திலேயே இந்தச் சுபாவம் இருந்தது. இப்போது அணித்தலைவனாக வந்த பின்னர் கூட மாறவில்லை. இனியும் மாறக் கூடாதென இவனது நண்பர்கள் நினைத்துக் கொண்டனர். அப்போதுதான் இவன் சொன்னான். இந்தத் தாக்குதலில் லத்தீப் திரும்பி வரமாட்டான். நீங்க லத்தீப்பிட்ட கேக்கிற தகவலை கேட்டுக்குங்க. வேணுமெண்ட மாதிரி போட்டோ புடுச்சுக்குங்க என்றான்.


விளையாட்டாக இவன் சொன்னது தமது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமையுமென்று அப்போது எவருமே நினைக்கவில்லை.


அந்தத் தாக்குதலில் எதிரியின் 15 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் தாக்குதலின் ஆரம்பத்திலேயே வீரச்சாவை எய்திய லத்தீப்பினதும் அவனது உடலைக் காப்பாற்றப்போய் வீரச்சாவு அடைந்தவர்களுமான 13 போராளிகளின் உடல்களைச் சுமந்து வரும்போது அவர்களின் மனம்-வீரச்சாவு அடைந்தவர் ளின் புகழுடல்கள் எல்லாமே பாரமாகத்தான் இருந்தன அவனது நண்பர்களுக்கு. ஏனெனில் அன்று அந்தப் பயணத்தைக் கலகலப்பாக்க லத்தீப் இல்லை. இப்போதெல்லாம் மட்டக்களப்பு. பிராந்திய விசேட தளபதி இந்த சீசனில் என்ன பகிடிய டாப்பா" என்று கேட்பதில்லை. இதைச் சொல்லத்தான் லத்தீப் இல்லையே ஆம் இவன் மறைவுடன் சிரிப்பே வற்றிவிட்டது

மட்டக்களப்பு மண்ணில்,



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code