அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கை நூலில் இருந்து ஒரு துளி
அடேல் பாலசிங்கம் எழுதிய Will to freedom எனும் நூல் அன்ரன் பாலசிங்கத்தால் சுதந்திர வேட்கை என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் 2003 இல் வெளியாகியது.
அதில் அவர்களது போர்க்கால அனுபவங்கள் பல பதிவிடப்பட்டிருந்தது.
ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார் ” 1987 ஒக்ரோபரில் இந்தியப் படைகளுடன் விடுதலைப் புலிகள் போரைத் தொடுத்தனர். அப்போது தலைவர் பிரபாகரன் தனது உறுப்பினர்களுடன் சண்டையிட்டபடியே முல்லைத்தீவை நோக்கிச் சென்று விட்டார்.
அவரது மனைவி மதிவதனி குழந்தைப் பருவத்தில் இருந்த தமது இரு பிள்ளைகளுடன் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம் பெயர்ந்து இருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுடன் கலந்து இருந்தனர்.
அப்படி இருந்த மக்களில் குறைந்தது 100 பேராவது தலைவரின் மனைவியைத் தெரிந்தவர்களாக நிச்சயமாக இருந்திருப்பார்கள். ஆனால் ஒருவருமே அவர்களை இந்தியப் படையினரிடம் காட்டிக் கொடுக்கவில்லை.
இந்தியப் படைகள் நல்லூர் பிரதேசத்தைக் கைப்பற்றி மக்களை வீடுகளுக்கு செல்ல அனுமதித்த போது இவர்களும் நிச்சயமாக சோதனைக்கு உட்பட்டே சென்றிருப்பார்கள்.
யாருமே இவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. பின்னர் இவர்கள் தமது விசுவாசிகள் மூலமாக பாதுகாப்பாக முல்லைத்தீவுக்கு தலைவரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கு நான் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற கருத்து நிலையிலிருந்து பதிவிடவில்லை.
அன்றைய மக்களது சமூக ஒற்றுமை உளப்பாங்கு எவ்வளவு தூரம் விசுவாசமாக இருந்தது என்பதையே குறிப்பிட வருகிறேன்.
அன்றைய நாளது சமூக ஒற்றுமை உணர்வு நிலை இன்றைய மக்களிடம் இருக்கிறதா?
இல்லை. இப்படியான நிலையில் நீங்கள் கூறிய அது வரவே வராது. வரலாறு எமக்கு கற்றுத் தரும் பாடங்களை வைத்து தான் வாழ்வியல் குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
சுதந்திர வேட்கை நூலில் கருணா குறித்த தனியான பதிவு இருந்ததால் 2004 மார்ச் மாதம் கருணா பிரிந்த உடனேயே அந்த நூல் பொது சமூக நீரோட்டத்திலிருந்து மீளப் பெறப்பட்டுவிட்டது.
0 கருத்துகள்