Ad Code

Recent Posts

லெப்டினன்ட் ஈழவேந்தன் வீர வரலாற்று நினைவுகள்

லெப்டினன்ட் ஈழவேந்தன்

கந்தசாமி விமலேந்திரன் 

வீரப்பிறப்பு: 14.10.1975

வீரச்சாவு: 25.07.1993


கிராமியத்துக்குரிய மிடுக்கு, தோற்றம் அனைத்தும் நிறைந்தவன் ஈழவேந்தன். ஈழவேந்தனால் அவன் பிறந்த கனகராயன்குளம் புனிதமடைகின்றது. அவனால் அவன் பிறந்த மண்ணுக்குப் பெருமை ஒரு வீரப்புதல்வனைப் பெற்றதால் அவன் பெற்றோர்க்குப் பெருமை.


மணலாற்றுக் காட்டின் போர்ப்பாசறையில் போர்க்கலை பயின்ற ஈழவேந்தனுக்கு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பிரதேசங்களில் களமுனைகள் கிடைத்தன.


பொறுமையும், பொறுப்பும், செயல்திறனும் இவனிடம் குறைவின்றி இருந்தன. கோபத்தை அடக்கியாளும் வல்லமையும் அதிகமுடைய இவனது முகத்தில். இனம் புரியாத சோகமொன்று என்றும் இழையோடிக்கிடக்கும். யாரிடமும் அதைச் சொல்லிப் பகிர்ந்து கொண்டதில்லை.


ஈழவேந்தன் சென்ற போர்க்களங்கள் பலவாக இருந்தாலும், வெற்றியைக் குவிந்த களங்கள் சிலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.


1991 ஆம் ஆண்டு மாசித்திங்களில் முல்லைத்தீவு இராணுவ முகாமின் முன்னணிக் காவலரண்களைத் தாக்கி அழித்து, பன்னிரண்டு எஃப். என். சி. மூன்று மினிமினி எல்.எம்.ஜி.துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களைக் கைப்பற்றியமை.


1992 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில், முல்லைத்தீவு இராணுவ முகாமின் முக்கிய காப்பரண்களைத் தாக்கி, 50 கலிபர் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்களைக் கைப்பற்றியமை.


மாங்குளம் இராணுவ முகாம் தகர்ப்பு. மணலாற்றில், தலைவனின் காலடியில் பயிற்சி பெறும் வாய்ப்புக்கிட்டியபோதே, மணலாற்றின் முக்கியத்துவம் இவன் நெஞ்சில் பதிந்து கொண்டது இதயபூமி – 1 தாக்குதல் நடவடிக்கைக்கு, வன்னியிலிருந்து புறப்பட்ட அணியில் இடம் பெற்றபோதே, மணலாற்றுப் பயிற்சிக்கால நினைவுகள் அவன் மனதில் நிழலாடத் தொடங்கின. அன்று மனதில் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியால், தன்மனதில் உறைந்துகிடந்த சோகத்தையும் வாய்விட்டுக் கூறினான்.


“வீட்டில் சரியான கஸ்ரம் மச்சான். இந்த சண்டையில் பெரிய சாதனையை நிலை நாட்டோணும். உயிரோட திரும்பி வந்தால், வீட்டுக்கஸ்ரத்தைச்சொல்லி வீட்ட ஒரு தடவை போய்ப்பார்த்து, உதவி செய்துவிட்டு வரலாம்” என்று சொல்லி, வீட்டு நிலைபற்றி மனம் விட்டுப் பேசினான். அவன் சொல்லியபடி சண்டையில் சாதனை நிலைநாட்டினான். ஆனால் வீட்டுக்குப் போகுமுன் நாட்டுக்காய் விடைபெற்றுக்கொண்டான்….!



‘இதயபூமி – 1’ இராணுவ நடவடிக்கையின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்!


மணலாறு, அப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தமிழீழத்தின் எத்திசையில் இருப்பவர்களுக்கும் அந்தமண் சொந்தமண் எம் வீரகாவியத்தின் தலைவனைக் காத்துத்தந்த பூமி அது, இந்த உண்மை எம் வீரர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதும், தலைவன் எமது மண்ணில் கொண்ட தளராத பற்றும், அவனது வளர்ப்புக்களின் அயராத கடின பயிற்சியும், நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் விவேகமும் இதயபூமி நடவடிக்கையின் வெற்றிக்கு வழிசமைத்தவைகளாகும். இந்த வெற்றி வரலாற்றோடும், இதயத்தோடும், இதயபூமியோடும் இரண்டறக் கலந்துபோனவர்கள்தான்.


லெப்டினன்ட் திருமலைநம்பி / பெர்னாண்டோ

லெப்டினன்ட் நக்கீரன் / செந்தூரன்

லெப்டினன்ட் காந்தி / அழகப்பன்

லெப்டினன்ட் விமலன் / வில்லவன்

லெப்டினன்ட் ஈழவேந்தன் / அமீர்

லெப்டினன்ட் குயிலன்

லெப்டினன்ட் வாசன் / தமிழ்வாணன்

லெப்டினன்ட் விக்ரம் / துரைக்கண்ணன்

2ம் லெப்டினன்ட் சியாமணி

2ம் லெப்டினன்ட் புகழரசன்



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code