செபமாலை ரவிந்திரன்
பள்ளக்கோட்டை, நானாட்டான்,
மன்னார்
வீரப்பிறப்பு: 17.02.1966
வீரச்சாவு: 22.03.1991
நிகழ்வு: மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
பாஸ்கரன், நானாட்டானில் உள்ள கன்னங்கோட்டை என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அந்தக் கிராமத்திலும் அதைச் சுற்றியிருந்த வயல் வெளிகளிலும் தான் பாஸ்கரனின் வாழ்வுக்காலம் கழிந்தது, தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலத்தில் இவன் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்டான். புலிகளின் பத்தாவது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு 1986 இன் நடுப்பகுதியில் ஒரு போராளியாக மன்னார் மண்ணில் நின்றான்.
பாஸ்கரன் அமைதியான சுபாவமுடையவன். ஒரு வித்தியாசமான போராளி. சக போராளிகளின் மனவுணர்வுகளை விளங்கிக்கொண்டு அவர்களின் நலனுக்காக எதையுமே செய்யக் கூடியவன். அதனால் தான் இவனில் எல்லாப் போராளிகளும் அளவிடமுடியாத அன்பை வைத்திருந்தார்கள்.
போர்முனைகளில் பாஸ்கரன் தன் திறமையைப் பலமுறை வெளிப்படுத்தினான். ஆபத்துக்களும் இவனைத்தேடி அடிக்கடி வந்தன. இந்தியப்படை இம் மண்ணை ஆக்கிரமித்திருந்த நேரம், வவுனியா மாவட்டக் கிராமமொன்றின் ஊடாக உழவுயத்திரத்திற் சென்றுகொண்டிருந்த புலிகளின் அணியொன்றின் மீது இந்தியப்படையினர் ஓர் தாக்குதலை மேற்கொண்டனர். மேஜர் தாடிபாலா கப்டன் சைமன் உட்பட 12 போராளிகளை நாம் இழந்தோம்.
அச்சந்தர்ப்பத்தில் இரு போராளிகள் தப்பினர். அதில் பாஸ்கரனும் ஒருவன். அன்று இவனது துப்பாக்கி ஒரு சில ரவைகளுடன் இயங்காமல இறுகி நின்றுவிட்டது. அச் சம்பவத்தை அதன் பின்பு அவன் பலமுறை வேதனையுடன் நினைவு கூர்வான். அதற்காகவே இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் தேச விரோதிகளையும் பலமுறை போர்க்களங்களை சந்தித்தான்.
அந்த நிலையில்தான் முள்ளிக்குளத்தில் தேச விரோத சக்திகளான "புளொட்' குழுவினர் மீது ஒரு தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் வியப்பு என்ன வென்றால் இவனது ஒரே ஒரு தம்பியும் அன்று புளொட் கும்பலுடன் நின்றான். ஆனால் பாஸ்கரன் அத்தாக்குதல் நடவடிக்கையில் முன்னின்றான், தன் தம்பி அங்கு நிற்பது அவனிற்குத்தெரியும். ஆனாலும் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்குத் தடையாக இருக்கும் எவரையும் மன்னிக்க அவன் தயாராக இல்லை. அத்தாக்குதலின் வெற்றிக்குப் பாஸ்கரனின் பங்களிப்பும் முக்கியமானது.
காலப்போக்கில், பாஸ்கரனின் தம்பி புலிகளிடம் சரணடைந்து திருந்தி நல்ல மனிதனாக மாறிவிட்டான்,
1990 ஆனி மாதம் இலங்கை அரசுடனான யுத்தம் தொடங்கிய பின் சன்னாடி இராணுவ முகாமின் ஒரு பகுதிக் காவலரணுக்குப் பொறுப்பாக பாஸ்கரன் நியமிக்கப்பட்டான் அவனிற்கு அருகில் ராஜா பஸ்ரியும் இருந்தார்கள், இவர்கள் மூவருக்குள்ளும் பிரிக்க முடியாத உறவொன்று கலந்திருந்தது.
எத்தனையோ இரவுகளில்,
காவலரண் மண் மூடைகளில் எதிரியின் வலயத்திற்குள் கண்களை வீசிய படியே இருக்கும் இவர்கள். தம் மனத்தின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். சிந்தனையைத் தூண்டும் அந்த இரவு நேரங்கள் தான் அவர்கள் மக்களை நேசிக்கும் உயர்ந்த மனிதர்களாக மாற்றியது. அவர்களிற்குள் மிக தெருக்கமானதொரு உறவு நிலையை ஏற்படுத்தியது.
சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதலின் பொழுது பாஸ்கரனும், ராஜாராமும், டஸ்ரியும் கடற்கரைப் பக்கமாக நின்றார்கள், கடலுதவியையும். கொண்டைச்சிப்பக்கமிருந்து வரும் இராணுவ உதவியை தடை செய்வது இவர்கள் சார்ந்த அணியின் பொறுப்பாக இருந்தது.
யுத்தம் தொடங்கியது - நான்கு நாட்களாகத்தொடர்ந்து நடந்தது. கடற்படைப்படகுகள் பலமுறை கரையை எட்டத் துடித்தன. புலிகள் அடித்துத் துரத்தினர். மன்னார்ப் போராளிகளிற்கே உரித்தான கலகலபபும் மகிழச்சியும் அத்தப் போர்முனைப் பகுதியை நிறைத்திருந்தது.
இறுதி நாள்
நாம் பின் வாங்க முடிவெடுத்தோம் கடற்கரைப்பகுதியில் நின்ற போராளிகள் பரந்த வெளியொன்றைத் தாண்டி வரவேண்டி இருந்தது. அண்ணளவாக ஒரு மைல் தூரமிருக்கும்.
வானத்தில் உலங்கு வானூர்திகளும் யுத்த விமானங்களும் வட்டமிட்டன. கொண்டைச்சிப் பகுதியிலிருந்து இராணுவத்தினர் முன்னேறி வந்து கொண்டிருந்தார்கள். அந்த வெட்டை வெளியில் வானத்திற்கும், தரைக்கும் ரவைகளைச் சிந்தியபடியே எம்மவர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள்,
அந்நேரம் நான் ராஜாராம் காயமடைந்தான் ராஜாராமின் பலவீனமான குரலை '"வாக்கிடோக்கியில் " கேட்ட பஸ்ரி தன் நண்பனை நோக்கி வேகமாகச் செல்லத்தொடங்கினான், ஆனால் "அவ்ரே" விமானம் போட்ட கண்டொன்று அவனை நோக்கி வந்தது. அக்குண்டின் வெடியோசையின் பின்பு பஸ்ரியை எவரும் காணவேயில்லை.
விமானங்கள் இராட்சதர்கள் போல் வானத்தில் நின்றன. ராஜாராமின் குரல் உதவியைக் கேட்டுகொண்டிருந்தது. தனது வாக்கிடோக்கியில் ராஜாராமிற்க்கு உறுதியைக் கொடுத்துக் கொண்டே பாஸ்கரன் அவனை நோக்கி விரைந்தான்.
*"கவலைப்படாதை - இப்ப வாறன். உன்னைச் சுட்டவனையும் இல்லாமலாக்கிறன் " பாஸ்கரனின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. அதே நேரம் எதிரிகளின் துப்பாக்கி ரவைகள் பாஸ்கரனின் உடலில் விழுந்து கொண்டிருந்தன.
சிறிது நேரத்தில், அந்த வெளியைப்புலிகள் கடந்திருந்தனர். அதற்கள் கப்டன் பாஸ்கரன் 2வது லெப் பஸ்சி உட்பட எட்டுப் போராளிகள் வீரமரணத்தைச் சந்தித்திருந்தனர்.
ராஜாராம் மருத்துவமனைக் கட்டிலில், பாஸ்கரனைப் பற்றியும், பஸ்ரியைப் பற்றியும், அவர்களின் இலட்சியத்தைப் பற்றியும் வார்த்தைகளைப் பற்றியும் நினைத்த படியே.........
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்