Ad Code

Recent Posts

மேஐர் தசரதன் (தசா) வீர வரலாற்று நினைவுகள்

மேஐர் தசரதன் (தசா)
சந்திரன் சுபாகரன்
கீரிமலை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 03.02.1979
வீரச்சாவு: 29.06.2001

நிகழ்வு: கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். 


1992ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப  இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில்  இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான். 


தொடர்ந்து மேஐர்  போர்க் அவர்களுடன் சிலகாலம் நின்ற தசா அங்கே இயந்திரவியல் சம்பந்தமாக படித்துக்கொண்டு அங்கிருந்த சர்வசேத்திலிருந்து வந்த படகுகளைப் பராமரித்து அதற்கான பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டான்.


போர்க் வீரச்சாவடைய லெப்.கேணல் மலரவனுடன் பொறியியற்துறையில் சிலகாலம் பங்குபற்றி அங்கே வெடிமருந்துகள் சம்பந்தமாக கற்றதுடன் படகுகளுக்கு ஆயுதங்கள் பூட்டுவது சம்பந்தமான தனக்கான தேடல்மூலம் நிறையவே கற்றுக் கொண்டான். தொடர்ந்து மாவீரரான லெப்.கேணல் திருவடி அவர்களுடன் இணைந்து தென் தமிழீழ விநியோக நடவடிக்கையில் பெரும் பங்காற்றிய தசா அதன் பின்னர்  லெப் கேணல் அண்ணாச்சியுடன் இணைந்து சாளையில் படகுகளை தேவைகளுக்கேற்ப இடங்களுக்கு மாற்றுவது  படகுக்காவிகளைப் பராமரிப்பதுடன் அக்காலப்பகுதியில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் படகுச் சாரதியாகச் சிறப்புத்தளபதியின் அனுமதியுடன் செவ்வனவே பங்காற்றினான். 


தொடர்ந்து கனரக ஆயுதப் பயிற்சி பெற்று பலகடற்சமர்களில் ஐம்பது கலிபர் துப்பாக்கியோடு பங்காற்றினான். ஐம்பது கலிபரின் சிறந்த சூட்டாளனுமாவான். இந்தநேரத்தில் தான் இந்தியா விநியோகத்திற்காகவும் அதற்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும் ஒருதொகைப் போராளிகள் மன்னாருக்குச் சென்றபோது  அங்கு சென்ற தசா அப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில். இவனது திறமையான செயற்பாடுகளைக் கவனித்த கடற்புலிகளின் முதலாவது தளபதியாகவிருந்த  கங்கைஅமரன் அவர்களின் மெய்ப் பாதுகாவலனாகவும் அவரின் வாகனச் சாரதியாகவும் இணைத்துக்கொள்கிறார். 


அப்பணியில் இருக்கையில் பணி நிமித்தமாக சென்றுகொண்டிருக்கையில் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் ஆழஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் தளபதி லெப் கேணல்  கங்கைஅமரன் அவர்களுடன் வீரச்சாவடைகிறான்.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code