கந்தசாமி ரதிதரன்
சுதுமலை வடக்கு,
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:-13.08.1967
வீரச்சாவு:-15.10.1988
நிகழ்வு:யாழ்ப்பாணம் இணுவிலில் இந்தியப்படையினர் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு
அந்த இராணுவ மிருகங்கள், இந்தச்செய்தி தெரியாது வந்த மினிபஸ் ஒன்றையும் மறித்து அதில் ஏறினர். அந்த மினிபஸ் மானிப்பாயிலிருந்து மாதகல் இராணுவ முகாமை நோக்கி ஓட வெளிக்கிட்டது. அது ஓர் துயரம் நிறைந்த சம்பவம். அந்த பஸ்ஸிற்குள் இருந்த ஒவ்வொரு தமிழனும் கொடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டான். சுடப்பட்டு வீதிவீதியாக வீசப்பட்டார்கள். அந்தப் பச்சை மிருகங்களின் கோரப் பற்கள் எங்கள் தேசத்தின் வீதிகளைச் சிதைத்துச் சென்றன.
அந்தச் சம்பவத்தின் பின்பு, வெளியில் வாழ்வதற்கு சுருளியின் மனம் இடந்தரவில்லை, அவன் ஓர் முழுமையான போராளியாக மாறிவிட்டான், பண்டிதர் அண்ணையுடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கினான்.
காலங்கள் ஓடின. விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது. சுருளியின் தம்பிகளில் ஒருவனான ரதிதரனும் புலிகளுடன் இணைந்து கொண்டான்.
இந்தியப் படைகள் தமிழீழ தேசத்தின்மீது ஆக்கிரமிப்பை நடாத்தி, ஓர் போரைத் தொடங்கிய நேரம். எம் தேசமெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ்ப் பெண்களில் பலர் படுமோசமாக பாலியல் வன்முறைக்காளானார்கள்.
இந்த மண்ணை நேசித்தவர்கள் பலர் பிடித்துச் செல்லப்பட்டார்கள் - சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். தமிழீழ தேசத்தில், விலக இடமின்றி இந்தியர்கள் நிறைந்து போய் நின்றார்கள்.
அந்த நிலைகளில், ஆயுத தளபாடங்களையும், ஆவணங்களையும் பாதுகாப்பதற்காக -சுருளியும் அவன் தோழர்களும் கடுமையாகப் போராடினார்கள். அந்த நாட்களில் அவர்கள் விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாத்தார்கள்; அதற்காக ஆயுதங்களைப் பாதுகாத்தார்கள்.
சில நாட்கள் சென்றன. இந்தியப் படையினர் சுருளியைத் தேடத் தொடங்கினார்கள். சுருளியின் வீடு அடிக்கடி சுற்றி வளைக்கப்பட்டது. போராட்டத்திற்காக இரு வரைத்தந்த அவனின் குடும்பம், கொடுமையான சித்திரவதைகளுக்குள்ளானது. -பல வருடங்களாக இருந்த பகையுணர்வை சமூக விரோதி ஒருவன், இந்தியர்களுடன் சேர்ந்து நின்று தீர்க்கத் தொடங்கினான்.,
அப்போதுதான் ஒரு நாள் சுருளியின் தம்பி ரதிதரனும், அவனது தோழர்களும் இந்தியப் படைகளாலும் தேசவிரோதிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டார்கள், சின்ன தொரு சண்டை ; ரதிதரனின் உடலிலும் சில ரவைகள்பட்டன. அவனது தோழர்கள் தப்பிச்சென்றார்கள்.
ரதிதரனின் உயிரற்ற உடலை இந்தியச் சிப்பாய்கள் வீதியால் இழுத்துச் சென்றார்கள். இந்த மண்ணை நேசித்த போராளி ஒருவன் - தேசவிரோதிகளாலும், இந்தியர்களாலும் இந்தத் தேசத்தின் தெருக்களின் வழியே இழுத்துச் செல்லப்பட்டான்.
இந்திய இராணுவத்தினர் இங்கு நின்ற பொழுது சில காலம் வன்னியில் நின்ற சுருளி, மீண்டும் யாழ்ப்பாணத்தில் வந்து நின்று செயற்படத் தொடங்கினான் ஆபத்து நிறைந்த அந்த நேரங்களில் சுருளியும், அவனது தோழர்களும் மிக அவதானமாகச் செயற்படவேண்டி இருந்தது. தேச விரோதிகளும் இந்தியர்களும் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி, முகாமிட்டு நின்றார்கள். தமிழீழ மக்கள் இந்தியத் துப்பாக்கிகளின் --முலைகளில் - நின்று - வாழ்ந்தனர்,
அந்த நேரம் தாக்குதலுக்குத் தேவையான --ஆயுதங்களை மறைவிலிருந்து எடுக்கவேண்டியிருந்தது; ஏனையவற்றைப் பாதுகாக்க வேண்டி இருந்தது. இதற்காக சுருளியும் அவனது தோழர்களும், நம்பிக்கையானவர்களைத் தேடி அலையவேண்டியிருந்தது.
இந்தியப் படைகள் இந்த மண்ணை விட்டு வெளியேறிய பின்பு, புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இணைந்து சுருளி செயற்பட்டான். -
சுருளி, கொடுக்கப்படும் எந்த வேலையையும் பொறுப்புணர்ச்சியுடன், சிறப்பாகச்செய்து முடிப்பவன். பண்டிதரிடமிருந்து இவனில் தாவிக்கொண்டதில் ஒன்று எளிமை.
தன்னைக் கவனியாது, ஒரு சைக்கிளில் கிராமத்து வீதிகளால் ஏதோ ஒரு வேலைக்காக ஓடித்திரியும் சுருளி... ஓர் வெடி விபத்தில் சிக்கினான்.
மூன்று நாட்கள் அவன் சாவுடன் -- போராடினான். ஆனாலும் 30.5.1991 அன்று, மேஜர் சுருளி வீரமரணத்தைச் சந்தித்துக் கொண்டான்,
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்