Ad Code

Recent Posts

கடற்கரும்புலி மேஜர் குமரவேல் (மதி) வரலாற்று நினைவுகள்



கடற்கரும்புலி
மேஜர் குமரவேல் (மதி)
கிருஸ்ணபிள்ளை சிவகுமார்
காங்கேசன்துறை யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 08.09.1973
வீரச்சாவு: 01.09.2001

வீரச்சாவு நிகழ்வு: பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் நீரூந்து விசைப்படகு மீதான தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவு 

01.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் முயற்சியின் போது கடற்கரும்புலி மேஜர் குமரவேல் (மதி)  (கிருஸ்ணபிள்ளை சிவகுமார் - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments

Link kopiert! Bereit für Instagram.