13-09-1990 அன்று மண்டைதீவிலிருந்து கோட்டை நோக்கிய சிறீலங்கா அரசின் முப்படைகளினது படை எடுப்பை முறியடித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் களப்பலியாகி கோட்டை முகாமின் உயிர் வாழ்வுக்குச் சாவு மணி அடித்த வீரர்கள்
எங்கள் உயிரோடும், உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப் போரிலே வீரமரணமடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகளின் வரிசையில் இங்கே மீளாத்துயிலில் கிடக்கும் வீரவேங்கைகளும் சேர்ந்து கொண்டார்கள்.
மரணம் இவர்களது பேச்சையும் மூச்சையும் நிறுத்திக் கொண்டதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கியுள்ளது. இவர்கள் ஆணிவேர் அறுபடாத ஆலமரங்கள். மீண்டும் வேர் விடுவார்கள், விழுதெறிவார்கள் புதிதாகப் பிறக்கும் புலிகளுக்குள்ளே இவர்கள் புகுந்து கொள்வார்கள்.
நெஞ்சு கனக்கும் தாயக விடுதலைக்கனவோடு எம்மைப் பிரிந்து செல்லும் இவர்களின் கனவை நாங்கள் நனவாக்குவோம்! என்று இவர்களுக்கு மூட்டும் சிதை நெருப்பின் மீது உறுதியெடுத்துக் கொள்கின்றோம்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையையும், வழிகாட்டலையும் ஏற்று நின்றும், துணித்து சென்று களமாடியும், வீரமரணமடைந்த இந்த வேங்கைகளுக்கு நாங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தும் வேளையில், எங்கள் தாயக மீட்புப் போருக்கு மீண்டும் எங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றோம்.
ஒரு கண நேரம் இந்த வீரர்களுக்காக குனிந்து கொண்ட எங்கள் தலைகளை மீண்டும் நிமிர்த்திக் கொண்டு புனிதப் போருக்குப் புறப்படுகின்றோம்.
கப்டன் அஞ்சனா
வட்டக்கச்சி, கிளிநொச்சி
குருபரன் யோகேஸ்வரன்
கொக்குவில் மேற்கு
கப்டன் ஆனந்தபாபு
ஆ. ஜெகதீஸ்வரன்
பூவரசங்குளம்,வவுனியா
குணேஸ்
ஜெ. ஜெகநாதன்
மயிலிட்டி
றெஜினோல்ட்
வி.வினோகரன்
மாமூலை,முள்ளியவளை
நிவாஸ்
சி. இராமச்சந்திரன்
வீராடுசேனை மட்டக்களப்பு
றொபின்
பேரின்பராசா கணேஸ்
பரந்தன்
லெப்.நெப்போலியன்
ச. விக்னேஸ்வரன்
கொக்குவில் மேற்கு -தாவு
தமிழ்ச்செல்வன்
பளை
விஜயன்
க. தெய்வேந்திரம்
கரவெட்டி மேற்கு
சுரேன்
சி.சுதாகர்
தம்பலகாமம் திருகோணமலை
சந்திரபாபு
பு.ராகவன்
வல்வெட்டித்துறை
நிக்கலஸ்
சு.ரவி
கப்புது
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”




0 கருத்துகள்