21.06.1990 அன்று வட தமிழீழம் மன்னார் மாவட்டத்தில் கஜீ வத்தை என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்பட்ட ,சிங்களவர்களைக கொண்டு குடியேற்றப்பட்ட கொண்டைச்சி 100 ஏக்கர் மரமுந்திரிகை பண்ணையில் அமைந்திருந்த சிங்கள இராணுவமுகாம் எமது வீரர்களின் தாக்குதலுக்கு உள்ளானது ,
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தாக்குதலின் பின் அந்த இராணுவ முகாம் எமது வீரர்களிடம் விழ்ச்சி கண்டது சக்தி வாய்ந்த பவள் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட கவசவாகனம் ஒன்று உட்பட 24 ஆயுதங்களை எமது வீரர்கள் கைப்பற்றியிருந்தார்கள் .
இம்முகாம் தாக்குதலின் போது
லெப். கோபிநாத்
செட்டிகுளம்.
மேஜர் வசந்த் (வி. விஜயதேவா)
நறுவிலிக்குளம்
வீரப்பிறப்பு:29-01-1970
கப்டன் தனபால்
(சிறிரங்கநாதன்)
வீரப்பிறப்பு: 22.07.1967
வீரவேங்கை சுபித்திரன்,
(ராஜன்)
தலைமன்னார்
வீரப்பிறப்பு: 07-04-1964
லெப். சுப்பிரமணி
(சுப்பிரமணியம்)
பரப்புக்கடத்தான்
வீரப்பிறப்பு:31-06-1971
வீரவேங்கை சாந்தா
கண்ணன்
தலைமன்னார்.
வீரப்பிறப்பு: 17-08-1969
பயஸ்
மயிலிட்டி
வீரவேங்கை ரமணி
மட்டக்களப்பு
வீரவேங்கை குவேந்திரன்
யாழ்ப்பாணம்.
வீரவேங்கை மேனன்
(சத்தியமூர்த்தி)
பரப்புக்கடந்தான்.
வீரப்பிறப்பு: 19-11-1968
வீரவேங்கை டிக்கன்ஸ்
(சர்வேசன்)
உயிலங்குளம்,
வீரப்பிறப்பு:01-01-1974
வீரவேங்கை பஞ்சன் ,
கிறிஸ்ரியன் ராஜன்
மாளிகைப்பிட்டி,
வீரப்பிறப்பு: 29-01-1967
உட்பட பன்னிருவர் வீரச்சாவை தழுவினர்
கொண்டச்சி முகாம் தகர்ப்பில் தமிழீழ விடுதலை புலிகளால் கைப்பற்றப்பட்ட பவல் கவச வண்டி.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்