கைலாசம்பில்லை புஷ்பாவதி
அநுராதபுரம்
வீரப்பிறப்பு: 18.01.1977
வீரச்சாவு: 27.05.1997.
27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
துடுக்குத்தனமும், குறும்புத்தனமும் மிக்க ஒரு போராளி. போராட்டத்தில் இவளது ஆரம்ப வாழ்வு மக்களோடு ஒன்றிய பணியாக இருந்தது. இந்தக் காலப் பகுதியில் மக்கள் எதிரியின் விமானத் தாக்குதலையும், கடல் தாக்குதலாலும் பட்ட பாடுகள், இழப்புக்கள் அவள் மனதில் ஆழ வேருன்றி நின்றது.
நான் கரும்புலியாகப் போகவேண்டும் எங்கட மக்கள் நிம்மதியாக கடலில் இறங்க வேண்டும் அதற்காகவே கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்கிறாள். மலை அசைவதுபோல் வரும் அலைகளுக்கு இடையில் லாபகமாக படகோட்டி அவள் செய்த கடற்சண்டைகள் ஏராளம் .
ஒவ்வொரு சண்டைக்கு போகும் போதும் அவள் சொல்லிப் போவது….. நான் கடற்சண்டையில் சாகக்கூடாது. கடற்கரும்புலியாகத்தான் போகவேண்டும். அப்படியேதான் சென்றாள்.
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்