Ad Code

Recent Posts

கடற்கரும்புலி மேஜர் இளமகன் வீர வரலாற்று நினைவுகள்

கடற்கரும்புலி மேஜர் இளமகன் 
தர்மலிங்கம் திருகணேசன் 
ஆரயம்பதி - மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 01.01.1973  
வீரச்சாவு: 27.05.1997.

நிகழ்வு: 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
 
எப்போதுமே சிரித்து சிரித்தே மற்றவர்களை கவர்ந்து நிற்கும் இளமகனுக்கு தெரியாததொன்று எதுவுமில்லை. கடற்சமராக இருந்தாலும், தரைத் தாக்குதலாக இருந்தாலும் இவனுக்கு எல்லாமே அத்துப்படி.
 
நீண்ட பெருநாட்களாய் இலக்கைத்தேடி அலையும் அவனுக்கான சர்ந்தப்பம் புல்மோட்டை நோக்கி விரைகிறது படகு. வீசி எழுந்த அலைக்கரம் எழுந்ததால் வெடிசுமந்த படகு இடியாக பேரொளியில் எங்கள் இளமகன் கரைந்து போனான்.

விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code