Ad Code

Recent Posts

கரும்புலி மேஜர் அரசப்பன் வீர வரலாற்று நினைவுகள்

கரும்புலி மேஜர் அரசப்பன் 

மயில்வாகனம் அருட்செல்வன் முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரப்பிறப்பு: 06.11.1978 

வீரச்சாவு: 27.05.1999


நிகழ்வு: மட்டுநகரில் தேசத் துரோகி"ராசிக்"மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலி மேஜர் அரசப்பன்!!


தென் தமிழீழம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 27.05.1999 அன்று தேசத்துரோகி ‘ராசிக்’ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட "கரும்புலி "மேஜர் அரசப்பன்  வீரவணக்க நாள்


யார் இந்த மேஜர் அரசப்பன் 


மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளுக்கு எதிராக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு ஒட்டுக்குழுக்களை ஶ்ரீலங்கா அரசாங்கம் கையாண்டுவந்தது.


அதில் தமிழீழ விடுதலை இயக்கம் TELO ஒட்டுக்குழு,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி EPRLF என்பன கடந்த 1986 ம் ஆண்டு தொடக்கம் 1999,ஆண்டு வரை முன்னணியாக செயல்பட்டன.


அதில் TELO ஜனா ஒட்டுக்குழு தலைவராகவும் அதன் செயல்பாட்டு உறுப்பினராக அவரின் உடன் பிறந்த தம்பி மாமா(தற்போது அவர் லண்டனில் வாழ்ந்து மரணமானார்) மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் பெற்றோர் உறவினர்கள் சகோதரர்கள் ஆதரவாளர்கள் என கிராமம் கிராமமாக தேடிச் சென்று பலரை கொன்று குவித்தனர். 


ஆரையம்பதி, செட்டிபாளயம், மாங்காடு, கிரான்குளம், தாழங்குடா, களுவாஞ்சிகுடி, காரைதீவு, பாண்டிருப்பு, போரதீவு, பழுகாமம், முனைத்தீவு, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை, அரசடித்தீவு, மகிழடித்தீவு, முனைக்காடு, முதலைக்குடா, கன்ன்குடா, ஆயித்மியமலை, கரவெட்டி, மண்டூர், நாவற்காடு என 1990ம் ஆண்டு காலப்பகுதியில்,  ரெலோ ஒட்டுக்குழுவின் ஆதிக்கம் அராஜகம் தாண்டவமாடியது இதனால் விடுதலைப்புலிகள் ரெலோவின் அப்போதைய ஒட்டுக்குழு தலைவர் ஜனா (கிழக்குமாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்) என்பவரை குறிவைத்து தாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர் இதனால் ஜனா இலங்கையில் வாழ முடியாமல் லண்டனுக்கு ஓடித்தப்பினார். 


புலிகள் மௌனம் 2009 மே 18,ஏற்படும்வரை இலங்கை பக்கம் தலைநீட்டிய வரலாறு ஜனாவுக்கு இல்லை ஜனாவும் அவரின் தம்பி மாமா உட்பட அவரின் சகோதரர்கள் எல்லோரும் லண்டனில் ஓடித்தப்பி வாழ்ந்தனர்அதனால் TELO ஒட்டுக்குழுவின் ஆதிக்கம் குறைந்தது.


ஆனால் EPRLF ஒட்டுக்குழு காரைதீவு ராசிக் என்பவரை அப்போதைய கிழக்கு மாகாணசபை முன்னால் உறுப்பினர் இ.துரைரெட்டணம் நன்கு பயன்படுத்தி வவுணதீவு பிரதேசத்தில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் உறவுனர்கள் ஆதரவாளர்கள் என ஏராளமானவர்களை சுட்டும் வெட்டியும் ராசிக் என்பவன் செய்துவந்தான்.


 ஶ்ரீலங்கா அரசின் துணைப்படை தளபதியாகவும் ராசிக் பதவி உயர்வு பெற்று தனியான ஒட்டுக்குழு ஒன்றை நிறுவி மட்டக்களப்பு மாவட்டம் அம்பாறை மாவட்டம் எல்லாம் தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு துரோகம் என்பவற்றை தொடர்சியாக அரங்கேற்றிவந்தான்.


இந்த ராசீக் என்பவனால் பல புத்திஜீவிகள் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர்

இவனை தீர்த்துக்கட்டுவதை அன்றி வேறு வழியில்லை என சிந்தித்த விடுதலைப்புலிகள் தற்கொலைப்போராளி ஒருவரை பயன்படுத்த தீர்மானித்தது அதற்காக பல போராளிகள் முன் வந்தபோதும் கல்குடா தொகுதியில் இருந்து பற்றுடன் செயலாற்றும் உறுதியான தமிழ் கிராமங்களில் ஒன்றான சந்திவெளி கிராமத்து வீரன் அரசப்பன் எனும் மறவன்(மயில்வாகனம் அருள்செல்வன்) எனும் கரும்புலி மேஜர் தெரிவு செய்யப்பட்டான்.


ஆம் அன்று 1999 ம் ஆண்டு மே மாதம் 29,ம் திகதி அந்த கொடூரன் ராசீக் என்பவன்மீது கரும்புலி பாய்ந்து கருமேகமாக கொலை வெறுத்தாண்டவம் புரிந்த கொடிய அரக்கன் ராசீக் மரணதண்டனை நிறைவேறியது.


மட்டக்களப்பு திருமலைவீதி மோட்டார் சைக்கிள் பழுதுபார்கும் கராஜ் ஒன்றில் தமது மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக ராசீக் என்பவன் இவ்விடத்தில் வந்தபோது சற்றும் எவரும் எதிர்பார்க்காத விதத்தில் மேஜர் அரசப்பன் திடிரென ராசீக் மீது பாய்ந்து தமது குண்டை வெடிக்க வைத்தான் அந்த நாள் மட்டக்களப்பு மாவட்டம் அம்பாறை மாவட்டம் அனைத்திலும் உள்ள தமிழ் மக்கள் ஆனந்த கண்ணீர் சொரிந்தனர் ஏனெனில் ராசீக் எனும் கொலையாளனால் துன்பப்பட்ட பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆயிரத்துக்கு மேல்பட்டவர்கள் ஏங்கித்தவித்து வாழ்ந்த காலம் அது ஒரு கரும்புலியை இந்த ராசீக் எனும் அரக்கனுக்கு எதிராக பாவிக்கப்பட வேண்டிய தேவை அந்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உண்மை விளங்கும், மேஜர் அரசப்பன் தம்மை ஈந்து தமிழினத்தின் மிக்பெரிய துரோகியை இந்த மண்ணில் வீழ்த்தினான் அவனின் தியாகம் இந்த மண்ணில் வீண்போகாது.


தற்போது முள்ளிவாய்க்கால் மௌனம் ஏற்பட்ட பின்பே லண்டனில் ஓடி ஒழித்த TELO ஜனா இலங்கைக்கு வந்து தற்போது ஈழப்போராட்டம் பற்றியும் தாமும் போராளி எனவும் சிலருக்கு வகுப்பு எடுக்கின்றார்.


அவரால் ஏற்பட்ட கொலை கொள்ளை அவலம் எல்லாமே தற்போது மூடி மறுத்தாலும் ஒருநாள் இறைவனால் வழங்கப்படும் தண்டனையில் இருந்து அவர் தப்பிக்கமுடியாது.


அவரைப்போன்றே அன்று கொடுத்து துரோகம் செய்து தமிழர் விடுதலையைப்போராட்டத்தை நாசம் செய்த பலர் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு எனும் மேக்கப்பை போட்டுக்கொண்டு தேசியம் பேசினாலும் இவர்களுக்கெல்லாம் இறைவனால் தீர்ப்பு கிடைத்தேயாகும்.


இந்த வேளையில் மேஜர் அரசப்பன் போன்ற பல கரும்புலிகளின் தியாகம் வீண்போகாது அவரை தமிழர்கள் மனதில் இருந்து அகற்றமுடியாது என்பது மட்டும் உண்மை.




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code