இத்தூஸ்பிள்ளை மேரிதாசன்
லிங்கநகர், திருகோணமலை
வீரச்சாவு::-12.05.1985
நிகழ்வு::-திருகோணமலை மூதூர் வெருகல் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து தாக்கியதில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
இரு இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான், அவனது இரண்டாவது மழலைச் செல்வம் பிறத்தது.
அது 1986 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலம்: மட்டக்களப்பில் போராட்டம் அப்போதுதான் வேர்விடத் துவங்கியிருந்தது. தென் தமிழீழத்தைப் பொறுத்தவரை அவன் முதன்மையானவன்.
யாழ்ப்பாணத்திலிருந்து ஆயுதங்கள் வரும் ஒவ்வொரு தடவையும், மூதூரிலிருந்து மட்டக்களப்பிற்கு அவற்றை எடுத்துச் செல்லும் பணியில் இளங்கோ இருப்பான்.
அன்று, அவனது மூன்றாவது குழந்தை அவனது மனைவிக்குத் துணையாக, யாருமேஇல்லை புறப்பட வேண்டியிருந்தது.
பிறந்து பதினோராவது நாள். ஆனாலும் புறப்பட்டான்.
புறப்படும் போது தன் மனைவியிடம் “போட்டுவாறன்... என் சொல்லிவிட்டு வந்தான்.
நான் வந்ததற்கு பிறகு மகளுக்கு என்ன பேர் வைக்கலாம் தீர்மானிப்பம்..., என்றுதான்
என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம். நான் சமாளிச்சுக் கொள்ளுவன்; நீங்கள் தான் கவனம்" என்றுதான் அவள் வழியனுப்பி வைத்தாள்.
தனது பிள்ளைகள் மூன்றையும் அவன் கட்டி அணைத்து முத்தமிட்ட போது - அவை தன் கடைசி முத்தங்கள் என எதையும் அவன் அறிந்திருக்கவில்லை.
வெருகல் துறைமுலம் அவன் அடிக்கடி பயணிப்பதை அறிந்த இராணுவம், ஆற்றோரத்தில் அன்றும் பதுங்கியிருந்தது.
முதாகுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவனும், கஜேந்திரனும் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
கஜேந்திரனைத் தப்பி ஓடச்சொல்லி விட்டு, தன்னிடமிருந்த எஸ்.எம்.ஜி. மூலம் இளங்கோ இராணுவத்துடன் சண்டையிடத் தொடங்கினான்.
அதே இடத்தில் இராணுவத்தினரால் நடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமகன் ஒருவர். இந்தச் சம்பவத்தைக் கதைகதையாகச் சொல்லுகின்றார்.
இளங்கோ அண்ணை சண்டையிட்டார்; ரவைகள் தீரும்வரை சண்டையிட்டார். தனது துப்பாக்கி எதிரியிடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக, எஸ்.எம். ஜியைப் பகுதி பகுதியாகப் பிரித்து, பொங்கிப் பெருகும் வெருகல் ஆற்றில் வீசி எறிந்தார்.
நிராயுதபாணியாக நின்ற அவரை உயிரோடு பிடித்துவிடச் சிங்களப் படை ஆவேசமாக எழுந்து பாய்ந்த போது, இளங்கோவை சயனைட் பாதுகாத்தது.
-களத்தில்
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்