சட்டநாதபிள்ளை கேதீஸ்வரன்
5ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரப்பிறப்பு: 04.03.1974
வீரச்சாவு: 26.02.1992
அவன் ஒரு வித்தியாசமானவன். தனது வாழ்நாளில் மட்டுமல்ல, மரணத்தின் பின் னும்தான் வித்தியாசமானவன் என்பதனை உணர்த்திவிட்டான். அவனது வாழ்நாள் அதிலும் போராட்ட வாழ்நாள் மிகவும் குறுகியதாக இருந்தாலும் வரலாற்று ஏடுகளில் அவனுக்கென்றொரு அத்தியாயம் எழுதப்பட்டுவிட்டது.
எந்நேரமும் கள்ளமற்ற சிரித்த முகம். என்றும் துன்பதுயரங்களுக்கு ஆட்படாத மனஉறுதி ஒவ்வொரு கண நேரமும் சுறுசுறுப்பான செயல்பாடு அவன்தான் ராதா. அவன் கால்கள் தவழ்ந்து திரிந்த பூமி இன்று எனது கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கின்றது. சிறீலங்கா அரசின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிக்கும் திருகோணமலையின் எல்லைகிராமங்களில் ஒன்றுதான் திரியாய் எனும் அழகிய சிறு ஊர். அது தான் ராதா பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்து வளர்ந்த மண். மிகவும் வறுமையான குடும்பத்தில் பெற்றோரையும் ஒரேயொரு பெண் சகோதரியையும் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் ராதா இருந்தான்ஆம், அவன் வீட்டுக்கு ஒரேயொரு ஆண்மகன் ஆனால் அந்த நாட்களில் குடும்பப் பொறுப்பை ஏற்கக்கூடிய வயதை அடையாத அவன் அவ்வூர் பள்ளியில் கல்வி கற்று வந்தான்.
ஆனால், ராதாவின் வயதுக்கும், அவனது மனவளர்ச்சிக்கும், செயற்பாட்டிற்க்கும் எவ்வித சம்மந்தமும் இருக்கவில்லை. அந்த சிறிய கிராமத்தில் எந்த ஒரு பொது வேலையானாலும், எந்த பொது நிகழ்வானாலும் அங்கே ராதாவைக் காணலாம். அவை ஒவ்வொன்றிலும் ராதாவின் முக்கிய பங்களிப்பு இருக்கும். கல்வி கற்கும் அவனது காலங்களிலேயே, சிந்தனைகள் பொதுவேலைகளில் நாட்டம் கொள்ள தொடங்கிவிட்டன. அவன் வீட்டில் இருக்கும் நேரம் மிக குறைவு அவனது பெற்றோரைப் பொறுத்தவரை அது அவனது குற்றமாகவும் இருந்திருக்கலாம். ஆனால். எந்நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் அவனுக்கு இந்த செயல்பாடுகள் தேவையாக இருந்தன.
மெல்ல மெல்ல அவனது விடுதலைப் போராட்ட உணர்வு துளிர்விட்டு வளர ஆரம்பித்தது. ஈழமண்ணில் இராணுவத்தினர் அராஜாகம் புரிந்து வந்த காலப்பகுதி அது. இந்திய இராணுவத்தினர் மீது முற்றுமுழுதான வெறுப்பும், எதிர்ப்புணர்வும் கொண்டிருந்த இவனும், இவனது பாடசாலை நண்பர்களும் தமது எதிர்ப்புணர்வைக் காட்டிக் கொண்டவிதம் சற்று வித்தியாசமானது.
இவர்கள் கல்வி கற்று வந்த பாடசாலையில் நடந்த ஓர் பொது நிகழ்ச்சியில் பாவிப்பதற்கென ஓர் புதிய, பெரிய நைலோன் நில விரிப்பு அங்கிருந்த இந்திய இராணுவத்தினரால் வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிவுற்றதும் இவனும், இவனதும் நண்பர்களும் சேர்ந்து அந்த நில விரிப்பைப் பலவேறு இடங்களில் கிழித்து சேதப்படுத்திய பின்னர் கொண்டு சென்று கொடுத்த பொழுது இந்திய இராணுவத்தினரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர். அந்த சிறுவயதில் அவனுக்கு இருந்த இந்த உணர்வுகள் பின்னர் அவனது போராட்ட வாழ்க்கைக்கு வித்திட்டது எனலாம்.
இந்திய இராணுவம் எமது மண்ணை விட்டு வெளியேறிய காலப்பகுதியில் இவன் விடுதலைப் போராட்டத்தின் மீது முழுமையாக ஈர்க்கப்பட்டிருந்தான். அக்கிராமத்தில் இயங்கிய விடுதலைப்புலிகளின் நெருங்கிய ஆதரவாளனாகவும் உதவியாளனாகவும் செயற்படத் தொடங்கினான். அவ்வூர்ப் பாடசாலையில் புலிகளின் மாணவர் அமைப்பினை ஏற்படுத்துவதற்குத் தானே முன்னின்று செயற்பட்டான்.
ஆனால், சிறிது காலத்தில் அவன் தன்னை முழுமையாகவே விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு முடிவு செய்துவிட்டான் தனது தாயாரைக் காப்பாற்றவேண்டிய தனது பொறுப்பைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. ஏனெனில், தனது தாயாரைப் போன்று எத்தனையோ தாய்மார்கள் இருப்பதை அவன் நன்குணர்வான். தாய் திரு நாட்டின் விடுதலையைத் தவிர வேறெதுவும் அவனுக்கு வேறெதுவும் பெரிதாகத் தெரியவில்லை.
முடிவைச் அவன் தனது செயற்படுத்தும் நோக்குடன் அப்பகுதி போராளிகளிடம் தனது முடிவை தெரிவித்தான். ஆனால் அவனது குடும்ப நிலையை நன்கு உணர்ந்த அவர்கள் ராதாவை இயக்கத்தில் இணைய அனுமதிக்கவில்லை.
அவன் எவ்வளவோ முயற்சி செய்தான். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. ஆனாலும், ராதா உறுதியாக இருந்தான். அவன் முடிவுகளை மாற்றிப் பழக்கமில்லாதவன். தனது ஊரில் இருக்கும் வரை இயக்கத்தில் இணையமுடியாது என்பதனை தெளிவாக உணர்ந்தான். விளைவு. தனது நண்பன் ஒருவனுடன் ஊரைவிட்டு வெளியேறினான். முல்லைத்தீவு வந்து சேர்ந்த ராதாவும், அவனது நண்பனும் அங்கு தம்மை இயக்கத்தில் இணைத்துகொண்டனர். ஆம், ராதா மிகுந்த சிரமப்பட்ட பின்னரே தனது போராட்ட வாழ்க்கையை ஆரம்பிக்கின்றான்.
முல்லைத்தீவில் தனது பயிற்சியை முடித்துக் கொண்ட ராதா முல்லை மாவட்டத் தளபதி காந்தனின் குழுவுடன் சேர்க்கப்பட்டான். பயிற்சியின் போது இவனது திறமையை அவதானித்த மேஜர் காந்தன் தனது முகாமில் நடத்தப்பட்ட பயிற்சிப்பிரிவிற்க்கு ராதாவை பயிற்ச்சியாளனாக நியமித்தான். அந்தப் பிரிவுக்கு பயிற்சி கொடுத்து முடித்த ராதா பின்னர் முல்லைத்தீவு இராணுவமுகாம் பகுதியில் இடம் பெற்ற பாரிய தாக்குதலில் பங்குபற்றி கையில் காயம் அடைந்து யாழ் வந்தடைந்தான். கையில் ஏற்பட்ட காயத்தினால் அவனது கை ஒருபக்கம் வளைந்துவிட்டது. சில மாதங்கள் யாழ்ப்பாணத்தில் நின்று தனது காயத்தை மாற்றிய ராதா பின்னர் வவுனியா பகுதிக்கு மாற்றப்பட்டான்.
மன்னார் வவுனியா எல்லைப் பகுதிகளிலேயே இவன் இறுதிவரை செயற்பட்டான்.
இப்பகுதிகளில் இவன் குறுகிய காலமே செயற்பட்டபோதிலும் அப்பகுதி மக்கள் மத்தியிலும், போராளிகள் மத்தி யிலும் மிகவும் பிரபல்யம் அடைந்தான். போராளிகள் அனைவராலும் மிகவும் அன்பாக நேசிக்கப்பட்டான். இவற்றுக்கெல்லாம் காரணம் அவனது சுறுசுறுப்பான செயல்பாடுகளும், திறைமையும் தான் அப்பகுதிகளில் நடந்த பல தாக்குதல்களிலும் இவன் பங்கேற்றான்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால் ராதாவின் பெயர் அப்பகுதி இராணுவத்தினர் மத்தியில் பரவலாக அடிபடத் தொடங்கியதாகும். ராதாவின் திறமையைக் கேள்விப்பட்ட இராணுவத்தினர் அவனை உயிரோடு பிடிப்பதற்குத் திட்டமிட்டுப் பல முயற்சிகள் செய்தனர். இதனை அறிந்த சகபோராளிகள் ராதாவிடம் இதைப்பற்றிக் கூறியபோது தனது இயற்கையான சிரிப்புடன் அதனை கேட்டுக்கொண்டான். இவ்வாறு தனது சக போராளிகளுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது ஒரு நாள் ராதா கூறினான், "நான் இராணுவத்தால் சுடப்பட்டு எனது உடல் இராணுவத்தால் எடுக்கப்பட்டாலும் சரி. அதற்கு முன் நான் இராணுவத்தின் ஒரு உடலையேனும் கைப்பற்றுவேன்" என்று உறுதியாகக் கூறினான்.
நிறைவேற்ற தனது சபதத்த்தை நிறைவேற்ற ராதா முழுமுயற்சி எடுத்ததான். அவனது எண்ணம் நிறைவேறும் நாளும் வந்தது 22-01-92 இல் வவுனியா சமயபுர பகுதியில் நடமாடிய இராணுவத்தினர் பற்றி தனது தனியான முயற்சியின் மூலம் வேவு பார்த்து வவுனியா மாவட்டத் தாக்குதல் அணியுடன் இணைந்து பதுங்கித் தாக்கி வெற்றி பெற்றதுடன் அத்தாக்குதலில் ஆறு இராணுவத்தின் உடல்களும் பல ஆயுதங்களும் கைப்பற்றப்படுவதற்குக் காரணமாக இருந்தான். இதனால், வன்னித் தளபதியினால் ராதாவிற்கு ரி81 ரக துப்பாக்கி வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டான்.
இவ்வாறு, பல வீரமிகு செயற்பாடுகளால் ராதா புகழடைந்து வந்தவேளையில்தான் அந்தச் துயரச் சம்பவம் நடந்தது. எதிரிக்கு மட்டுமல்ல காலதேவனுக்கும் அவனின் வீரமிகு செயற்பாடு பிடிக்கவில்லை போலும், அவனும், இவனின் உயிரை பறிக்கத் திட்டம் தீட்டியிருந்தான்.
ஆனால், அதனை அறிந்து கொள்ளும் ஆற்றல் மட்டும் எமக்கு இருந்திருந்தால் .. அந்த கொடிய நாளில்..... இராணுவத்தினர் தமது தாக்குதல் முயற்சியில் தோல்வியடைந்து பின்வாங்கிச் சென்ற வேளையில் அப்பகுதிக்குச் சென்ற ராதா இராணுவத்தின் இலக்காகிக் தாக்குதலுக்கு காயமடைந்த சயனைட் அருந்தி வீரச்சாவு எய்தினான். மரணித்த பின்னரும் சரித்திரம் படைத்த மாவீரர் வரிசையில் ராதாவும் ஒருவன்.
ஒரு போராளி தனது எதிரியினாலும் மதிக்கப்பட்டவனாக இருந்தால் அதை விட அவனுக்கு புகழாரம் தேவையில்லை. ஆம், ராதாவின் உடலைக் கைப்பற்றிய இராணுவத்தினர் அவனின் உடலுக்கு எந்தச் சேதத்தையும் விளைவிக்காது அவன் அருகில் கிடந்த ஓர் அட்டையில் "போராளி" என்று எழுதியமையோடு அவன் அணித்திருந்த தகட்டினையும் அவனருகேயே விட்டுச் சென்றனர். ஆனாலும், அவன் மரணிக்க முன்னர் தனது சபதத்தை நிறை வேற்றிவிட்டான். ராதா எம்மத்தியில் இல்லை. ஆனால், அவனின் சிரிப்பு, சொற்கள், சுறுசுறுப்பு எங்கள் மத்தியில் தவழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவன் எம்மத்தியில் இல்லை என்ற உணர்வு எமக்கு ஏற்பட இன்னும் பல காலமாகலாம்.
ஆம், அவன் வித்தியாசமானவன். வாழ்ந்தபோது மட்டுமல்ல மரணத்தின் போதும் அவன் வித்தியாசமானவன்.
கே. கபில்
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்