கப்டன் இளையவள்
இராசலிங்கம் இராஜமலர்
தமிழீழம்: திருகோணமலை மாவட்டம்
வீரப்பிறப்பு: 31.10.1974
வீரச்சாவு: 30.03.1996
காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து
கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம் கொடுத்துச் சென்றிருந்தாள். இறுதிவரை அந்தக் குப்பியை இளையவள் வைத்திருந்தாள். அவளுக்குக் குப்பி தேவையில்லைத்தான், ஆனாலும் செவ்வானத்தினுடையது என்று வைத்திருப்பதில் தோழமை…….நட்பு……………… அந்தக் கடல்மடியில் விட்டுச்சென்ற நீங்காத நினைவுகள்…………. அவை ஓயப்போவதில்லை, ஆர்ப்பரித்துச் செல்லும் கடலைகளைப்போல.
அப்போது அவள் ஓரளவுதான் நீந்துவாள். ஆழமான கடற்சுழிகள், கொந்தளிப்பு எதற்கும் எதிர் நீச்சல் போடும் திறணற்ற கற்றுக்குட்டி. நீச்சல்காரி, அன்றைய கடற்பயணம் கலகலப்பானதாக இருந்தது. ஆனாலும் கடல் நிலைமை அவ்வளவு சரியில்லை. அமைதியாக இருக்கின்ற கடலில் திடீரென அலைகள் உயரக்கிளம்பலாம், காற்றுத் திசைமாறலாம்.
ஒரு பெரிய அலை வந்து படகு தடுமாறி அவள் விழுந்தேவிட்டாள். அவளோடு இன்னும் இருவர். அவள் ஒருமாதிரி தட்டுத் தடுமாறி மூச்சுத் திணற, மற்றவரின் கழுத்தைப்பிடித்து ஆதரவு தேட, இருவரையும் தூக்கிப் பயணம் முடிந்து திரும்பினர்.
லெப்.கேணல் மாதவியக்காவிற்கு இந்தக் கதைபோய்விட்டது.
“இளையவள் நீந்தத் தெரியாமல்தானே அப்படிச் செய்தனை?” என்று கேட்க,
“இல்லையக்கா. நான் அவையளுக்கு நீந்தத் தெரியுமோ எண்டு பாக்கிறத்துக்குத்தான் அப்படிச் செய்தனான்”.
என்று சிரிக்காமல் கூறி, நடந்ததை அப்படியே தடம்புரட்டிவிட எல்லோருக்கும் ஒரே சிரிப்பு.
கடைசிக் காலங்கள் எல்லோரையும் குடல் அதிரச் சிரிக்கவைத்த கணப்பொழுதுகள்,,,,,,,,,,,,,, அவளுக்கு முதற் சண்டையும், கடைசிச் சண்டையும் அதுதான். அவளது சாவுக்கான நாள் குறித்தாயிற்று. அந்த நாளில்தான் அவளது பாசமான அண்ணனுக்குத் திருமணவீடு. இவளது வீட்டுக்காரர் இவளை விடுமுறையில் விடுமாறு கேட்க, முதலில் மறுத்துவிட்டாள். ‘நாள்’ தாண்டிப்போனால் தன் வாய்ப்பு போய்விடுமே என்ற ஏக்கம் அவளுக்கு.
“இளையவள் நீங்கள் வீட்டை போங்கோ, இன்னொருதரம் போக வாய்ப்பு உங்களுக்கு வரும்தானே!”
என்றபோதும் ஒரேயடியாய் மறுத்து, பின் தன் தமையனுடன் போய் ஒரு நாள் நின்று விட்டு, கல்யாணத்திற்கு இல்லாமல் வந்துவிட்டாள்.
1996.03.30 அன்று இரவு கடலலைகள் அதிர்ந்து குலைய, எங்கள் இளையவள் கரைந்து போனாள். சுண்டிக்குளம் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப் பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.
வெளியீடு :-களத்தில் இதழ்
வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்