Ad Code

Recent Posts

கேணல் பகலவன் அண்ணையின் சிறு வரலாற்று குறிப்பு

கேணல் பகலவன் 

ஜோசப் அல்வின் ஜெகதிஸ் 

தமிழீழம்: யாழ் மாவட்டம் 

வீரப்பிறப்பு: 14.03.1977

வீரச்சாவு: 04.02.2009


கடல் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதி கேணல் பகலவன்  1989 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இணைந்து கொண்டு எமது தாயகத்தின் விடுதலைக்காக ஆரம்பத்தில் யாழ் மாவட்ட தாக்குதல் படையணியிலும், 

சாள்ஸ் அன்ரனி படையணியிலும் பங்கு பற்றிய இவர் 1993 ம் ஆண்டு கடற்புலிகளின் படையணியிலும் இணைந்து முதன்மை கனரக ஆயுத சூட்டாளராகவும் சண்டைப் படகுகளின் பிரதான ஆயுதங்களின் சூட்டாளராகவும் கடற்ச்சமர்களிலும் பங்காற்றி பின்னர் படகு கட்டளை அதிகாரியாகவும் பனியாற்றிய போது இவரின் திறமையைக் கண்டு ஆழ்கடல் விநியோக கட்டளை அதிகாரியாகவும் செயற்ப்பட்டார்.


கடலில் நடைபெற்ற அதிகளவான அதாவது  ஏறத்தாழ 165 க்கு மேற்பட்ட கடற்ச்சமர்களிலும் ஆழ்கடல் விநியோகத்திலும் பங்கு பெற்றிய பெருமை உண்டு.


சமாதான காலத்தில் யாழ் வடமராட்சி பகுதியில் லெப் கேணல் அமுதாப் அண்ணா அவர்களோடு வந்து கடமையாற்றியவர். அமுதாப் அண்ணாவும் பகலன் அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் கூடுதலாக செல்வார்கள்.  அப்போது நான் ரெக்கார்டிங் சென்றார் கடையில் வேலை செய்த போது என்னைத் தேடி வருவார்கள் ஒவ்வொரு தினங்களுக்கும் ஒலி பெருக்கிகள் எடுத்து கொடுப்பது அப்படி பல உதவிகள் செய்தேன். 


அவருக்கு வன்னிக்கு செல்வதற்கு முதல் நாள் நம்மிடம் வந்து கதைத்து விட்டு கஸ்பர் துனியில் யூ வடிவம் போல் இரண்டு பொக்கற் உள்ள சேட் எனக்கு தந்து சென்றவர் தான் பகலவன் அமுதாப் அண்ணா அவர்கள். 


 அந்த சேட்டை அறிமுகம் செய்தவர்கள் அவர்கள் தான் அது புதுக்குடியிருப்பு ரெயிலர் கடையில் தயாரிக்கப்பட்டது நமது ஊரில் சில பேருக்கு தகவல் தெரியும் என் கூட இருந்தவர்களுக்கு மட்டும் தெரியும்.







கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code