Ad Code

Recent Posts

18.10.2006 அன்று வீர காவியமான 4 கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்.

18.10.1997 அன்று சிறிலங்காவின் காலித்துறை முகத்தில் வைத்து பல கடற்படைக் கலங்களை அழித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தில்லைச்செல்வி, லெப்.கேணல் அரவிந்தா உட்பட கடற்கரும்புலிகளின்  நினைவு நாளும்,

18.10.1997 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் ஆகியோரின் நினைவு நாளும்,

18.10.1995 அன்று யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாவண்ணனின் நினைவு நாளும் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.






தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

Thamizh Maaran இவ்வாறு கூறியுள்ளார்…
வீர வணக்கம்.
நிலவில் ராதா. இவ்வாறு கூறியுள்ளார்…
காலி முகத்திடலில் வீர காவியமான்
லெப்'கேணல் 'தில்லைசெல்வி
புல்மோட்டை கடற்பரப்பில் வீர கவியமணா
மேயர் .திருமாறன்
கப்டன் ;சின்னவன்
ஆகியோரின் நினவஞ்ச்சளி கவி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
காலி முகத்திடல்
என்ன
கைக்கு எட்டிய
தூராமா
கண்ணு தென்படும்
திசையா

ஈழத்தின் விடிவிற்காய்
எம் புலிகளுக்கே
எல்லாமே இலகுதான்
விடியலை தேடிய
வேங்கைகள் "

காற்றினை கிழித்து
ஆழ்கடல் பற்றி
கைகால் வழி மறைத்து
பலமையில் சுழியோடி'

வார்த்தையில் சொல்லிட
முடியாத செயல்கள்
முதுகினில் வெடியினை
முன் பயிற்சி அனுபவம்
முறையாக தலைவன்
வழங்கியே அனுமதி \
கொடுத்திட"

கடற்கலங்கள் பலத்தை
தாக்கியே காலி முகதிடளிலும்
புல்மோட்டை கடற்பரப்பிலும்
வீர காவியமான
கடற் கரும் புலிகளுக்கு
வீர வணக்கம்

Ad Code