Ad Code

Recent Posts

கடற் கரும்புலி கப்டன் கண்ணாளனின் வீரவரலாற்று நினைவுகள்




கடற் கரும்புலி
கப்டன் கண்ணாளன்
ஆறுமுகம் அமிர்தலிங்கம்
தமிழீழம்:மட்டகளப்பு மாவட்டம் 
வீரப்பிறப்பு:29.05.1979
வீரச்சாவு:18.10.2006

2004ம் ஆண்டு 26 ஆம் நாள். ஆழிப்பேரலை அனர்த்தம் நம் மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற் கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று.

அங்கு அவனுக்காக பணிகள் நிறையவே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை, என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லமே அவன்தான். வீட்டின் இல்லாமை போக்க அவன் உழைக்க வேண்டியதாயிற்று…

ஆனால், முதன்மையான தாக்குதல் ஒன்றிக்காக பயிற்சித் திட்டங்கள் எல்லாம் நிறைவு செய்த நிலையில் அவன்… ஓர் அளவுகோலில் ‘’பாசம்’’இ ‘‘கடமை’’ என்றை இரண்டையும் நிறுவை செய்தான். அவனது மனச்சாட்சி முன் ‘‘கடமை’’ என்ற பக்கம் தாண்டு கொண்டது. அவன் முடிவெடுத்தான். தன் நிலைமையை அந்தத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பானவரிடம் சென்று கதைத்தான்.


‘‘நான் அந்த நடவடிக்கையைச் செய்யப் போறன்… இனி இந்த நடவடிக்கைக்காகப் புதுசா ஒருவருக்குப் பயிற்சி கொடுத்து வளர்த்தெடுக்க எவ்வளவு காலம் எடுக்கும்… என்னால இந்த நடவடிக்கையில் எந்தவொரு காலதாமதமும் ஏற்படக்கூடாது… 

 ஆனா… என்ற குடும்பத்த நீங்கள் பார்க்க வேண்டும்…

குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டபோதும் அவன் தன் இலக்கிலிருந்து பின்வாங்காது தன் கடமையைச் சரிவரச் செய்தான். அவன் வேறுயாருமல்ல காலிமுகத் துறைமுகத்தில் வரலாறு எழுதிய கடற் கரும்புலிகளில் ஒருவரான கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்…

‘‘ஈன்ற பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’’ என்ற வள்ளுவன் கூற்றுக்கு எடுத்துக்காட்டான பெரு வீரனாய் கண்ணாளன்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

sakthy இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்!
உங்களது பதிவுகள் மிக நன்றாக இருகின்றன.. தொடர்ந்து எழுதவும்.
ஒரு சின்ன விண்ணப்பம் , உங்கள் பக்கத்தில் உள்ள "தமிழீழ தலைவரின் சிந்தனைகள்" படத்தில் வரும் flash நிறுத்தலாமே இல்லை வேறு அமைப்பை மாற்றலாமே... அது அவசியமில்லாத ஒன்றாக படுகிறது...உங்களது தனிப்பட்ட விருப்பில் விமர்சிப்பதற்கு மன்னிக்கவும். முடிந்தால் மற்றலாமே...

- ஈழத்து ஸ்நேகிதி

Comments


 

Ad Code