Ad Code

Recent Posts

லெப்ரினன் போசன் அல்லது அன்பழகன் என்ற மாவீரனின் வீரவணக்க நினைவுநாள் இன்றாகும்.

யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையை நிலையான முகவரியைக் கொண்ட பத்மநாதன் பத்மகுமார் என்று அழைக்கப்படும் லெப்ரினன் போசன் அல்லது அன்பழகன் என்ற மாவீரனின் 20ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.


1990ம் ஆண்டு தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப்போரட்டத்தில் இணைத்துக் கொண்ட இவன் முதலாவது பயிற்சியாக வேவுபனிக்கான பயிற்ச்சிகளை மேற்கொள்கிறான்.
வேவுபனிக்கான பயிற்ச்சிகளை முடித்துக் கொண்டு  முதலாவதாக மணலாற்றில் தனது கால்களை பதிக்கின்றான். 

இவன் மணாலற்றில் வேவுப் பயிற்ச்சிகளை ஆர்வத்துடன் மேற்க்கொண்டு முதன்மை வகித்தான் பின்பு முன்னாள் மணலாற்று பொறுப்பாளராக செயற்பட்ட
லெப்ரினன் கேணல் அன்பு அவர்களின் அணியின் கீழ் செயற்பட்டு மணலாற்றில்உள்ள ஸ்ரீலங்காப்படைதளம் அனைத்திற்க்கும்  சென்று வேவுநடவடிக்கையில் ஈடுபட்டான்.
இவன் கடைசியாக தளபதி பிரிகேடியார் பால்றாஜ் அவர்களின் கட்டளையின் கீழ் மணலாறு கொக்குளாய் பகுதியில் உள்ள கோட்டைக்கேணியா படைத்தளவேவிற்காக அனுப்பிவைக்கப்பட்ட இவன் இதே நாள் எதிரியின் வலைக்குள் சிக்குண்டு 21.01.1992 அன்று தமிழீழத்தில் வீரவரலாறானான்.

இந்த மாவீரனுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code