Ad Code

Recent Posts

மரணத்திற்குப் பிறகும் வாழும் முத்துக்குமாரின் படம் 29.01.2011 அன்று திறப்புவிழா கோவையில்


ஈழத்தமிழருக்காக தன்னையே மாய்த்துக் கொண்ட மாவீரன் முத்துகுமாரின் மரண சாசனம்.


சீனாவின் டாங்கிகள்,
இந்தியாவின் உளவு விமானங்கள்,
பாகிஸ்தானின் ஆட்லறிகள் மட்டமல்ல...
இப்போது எம் மக்களை கொலை செய்து வருவது
சர்வதேச சமுகத்தின் மௌனமும்தான் என்பதை
எப்போது உணர்வீர்கள்.

நியாயத்தின் பால் பெருவிருப்பு கொண்ட 
ஒரு மக்கள் சமூகம் பூமியில் இருந்து 
முற்றாக துடைத்து அழிக்கப்பட்ட பிறகா? 

மரணத்திற்குப் பிறகும் வாழும் முத்துக்குமாரின் படம் நாளை காலை 10.00 மணிக்கு உலக மனிதாபிமான கழகத்தால் கோவையில் திறந்து வைக்கப்படவுள்ளது.  இந்நிகழ்வில் வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் திரைப்படக்கலைஞர்கள் ஆகியோர் பங்குபற்றுகிறார்கள்.

தமிழீழ தாயக விடுதலைக்காக தன்னுயிரை நெருப்பிலிட்டு வீரச்சாவடைந்த தியாக பேரொளி எங்கள் முத்துகுமாருக்கு வீரவணக்கம்.

Image Hosted by ImageShack.us

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code