Ad Code

Recent Posts

லெப்.கேணல் பவமாறன் வரலாற்று நினைவுகள்

லெப்.கேணல் பவமாறன்
மாட்டின் சில்வா ஜெயச்சந்திரன்
மட்டக்களப்பு மாவட்டம் 
வீரச்சாவு:15.09.2007

நிகழ்வு: அம்பாறை மாவட்டத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவு

அம்பாறை வனப்பகுதியில் 15.09.2007 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பவமாறன், லெப்.கேணல் அயோனி, லெப்.கேணல் மிதுலன் மற்றும் மேஜர் எரிமலை ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

அம்பாறை வனப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிப்போராளிகளான இவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர்.

இவர்களில் லெப்.கேணல் பவமாறன் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல தாக்குதல்களை நடத்தி பல படையினரின் உயிரிழப்பிற்கும் அவய இழப்பிற்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை வனப்பகுதிக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திய இவர்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கிளைமோர் வெடித்ததினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code