Ad Code

Recent Posts

லெப்.கேணல் சேரமானின் வீர வரலாற்று நினைவுகள்

லெப்.கேணல் சேரமான்

கதிர்காமத்தம்பி சஞ்சயன்

தமிழீழம்: யாழ் மாவட்டம் 

வீரப்பிறப்பு: 27.12.1972

வீரச்சாவு: 21.04.2001


இறுதிவரை உறுதி தளராமல் கட்டளைகள் பிறப்பித்த வீரமறவன் லெப்.கேணல் சேரமான்.


முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் வலிந்த தாக்குதலில் வீரச்சாவு 


1991 ஆண்டு பிற்பகுதியில் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சேரமான் கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில்

 தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்து பின்னர் தலைவரின் சிந்தனைக்கு அமைவாகவும் கடற்புலிகளின் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடும். பலகரையோரப் பிரதேசங்கள்.கடற்புலிகளுக்கு அரசியல் பணிகளுக்காக வழங்கப்படுகிறது. அந்தவகையில் இவரும் அந்த அரசியல் பணிக்கு செல்கிறார்.


 28.02.1992 அன்று யாழ்ப்பாணம் தாளையடிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருக்கு எதிராக ஒரு வலிந்த தாக்குதல் முயற்சி மேற்கொளளப்பட்டது. அம்முயற்சி வெற்றியளிக்காத போதிலும் அம்முற்சியில் நாம் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் கடற்புலிகள் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி ஆரம்பிக்கப்படுகிறது.இவ் பயிற்சிக் கல்லூரிக்கு போராளிகள் உள்வாங்கப்பட்ட போது சேரமானும் உள்வாங்கப்படுகிறார். அங்கு பயிற்சி முடிவடைந்தும் ஆசீர் படையணியில் இணைக்கப்படுகிறார் (இப்படையணியானது கடல்விநியோகம் மற்றும் கடற்தாக்குதலணியாகவும் செயற்பட்டது. 


குறிப்பாக யாழ்ப்பாணத்திற்க்கும் வன்னிக்குமான போக்குவரத்துப் பாதையாக செயற்பட்ட கிளாலி நீரேரியில் மக்களுக்கான பாதுகாப்பையும் இப் படையணியினரே வழங்கினர்.)அங்கு ஏனைய பயிற்சிகளைவிட தொலைத் தொடர்புத்துறையில் முன்னனி வகித்ததால் தொலைத் தொடர்புத்துறைக்கு உள்வாங்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டது.அதன் பின் போராளிகளுக்கு தொலைத்தொடர்பு சம்பந்தமான  வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்த வேளையிலும் கடற்சமர்களில் பங்கு கொண்டு தனது திறமையையும் வெளிக்காட்டத்தவறவில்லை அவ் வேளையில் தான் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின்.வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச கடற்பரப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த போராளிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.


அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் தமிழீழத்தில் முல்லைத்தீவு இராணுவ முகாம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற் சிறுத்தைகளின் பொறுப்பாளரான லெப் கேணல் சேரனின் இடத்திற்க்கு சேரமான் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.


தமிழீழத்தில் நடைபெற்ற  பல கடற்சமர்களில் கடற்புலிகளுக்கு உதவியாகவும்.தனித்தும் .இச் சிறுத்தைப்படையணி பங்குபற்றியது.அதன் பின் தலைவரின்  கட்டளைக்கு அமைவாக கடற்சிறுத்தைப்படையணி கடற்புலிகளுடன் இணைக்கப்படுகிறது. அவ்வேளையில் தனது படையணியனருடன் கடற்புலிகளுக்கு வந்த சேரமான் கடற்புலிகளின் விநியோகப் பாதுகாப்பிற்கான சமரிலும் சரி கடற்புலிகளால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட வலிந்த தாக்குதலாகிலும் சரி தனது ஆற்றலை வெளிப்படுத்தத்தவறவில்லை. 


அத்தோடு ஒய்வுநேரங்களில் போராளிகளுக்கு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்புகள் எடுப்பதிலும் தனது கடல் அனுபவமாகிலும் சரி தனது கடற்சண்டை அனுபவங்களையும் நகைச்சுவையோடும்  சொல்லிக்கொடுத்த ஒரு ஆசான்.


இப்படியாக ஒவ்வொரு விடயத்திலும் போராளிகளை வளர்த்து விடவேண்டும் என்கிற அவா அவனுள் இருந்து  இப்படியான ஒரு உன்னத போராளி 21.04.2001 அன்று எமது விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளுக்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுககொண்டிருந்த கடற்தாக்குதல் அணிமீது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினரின் வலிந்த தாக்குதலில் இறுதி வரை எப்படி சண்டைபிடித்தார் என அவரது கட்டளைகள் எப்படி இருந்த தென்று கட்டளை மையத்தலிருந்தவர்களுக்கத்தான் தெரியும். இறுதிவரையும் உறுதி தளராமல் பதற்றமில்லாமல் கட்டளைகள்  பிறப்பித்தபடி அணிகளை (படகுகளை )பிரியவிடாமல் எல்லோரையும் ஒன்றாக்கியபடி ஒரு மூர்க்கத்தனமாக போராடி வீரகாவியமான வீரமறவனுக்கு வீரவணக்கத்தை  செலுத்துகிறோம்.


உருவாக்கம்- சு.குணா



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த
இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code