Ad Code

Recent Posts

வீரவேங்கை ரஞ்சனின் வீர வரலாற்று நினைவுகள்

வீரவேங்கை ரஞ்சன்

சரவணமுத்து சத்தியசீலன்

வவுனிக்குளம், மாங்குளம், 

முல்லைத்தீவு 

வீரப்பிறப்பு:-08.05.1968

வீரச்சாவு:-11.03.1986

  

நிகழ்வு:-முல்லைத்தீவு முல்லை மல்லாவிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகையின்போது ஒரே கைக்குண்டை வெடிக்கவைத்து வீரவேங்கை ஜீவாவுடன் வீரச்சாவு


ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் வானூர்திகளிலும், கவசவண்டிகளிலும் வந்திறங்கி துணுக்காயை முற்றுகையிட்டனர்.


மூன்று நாட்கள் இந்தப்பாரிய முற்றுகை நடந்தது.


அந்த முற்றுகையின் இரண்டாம் நாள்.


அனிச்சங்குளத்தில் காத்திருந்து படையினரின் வண்டித் தொடர்மீது கண்ணி வெடித்தாக்குதல் நடாத்திய ஜீவாவும் ரஞ்சனும், நடந்து வந்த இராணுவத்தினரின் வளைப்பிற்குள் அகப்பட்டுக்கொண்டனர்.


ஆயிரக்கணக்கான படையினருக்கு நடுவில் அவர்கள். தூரத்திலிருந்து எம்மால் எதுவுமே செய்ய முடியாத நிலை. "வோக்கி'த் தொடர்பு மட்டுமே எங்களுக் கிடையில் இருந்தது.


அவர்களிடமிருப்பது ஒரேயொரு றைபிள் தான் என்பதையும், அவர்கள் இருவர் என்பதையும் மிகச்சரியாக ஊகித்துக் கொண்ட எதிரி உயிரோடு பிடிக்கும் நோக்கம் கொண்டு, ரவைகளைப் பொழிந்தபடி வட்டமாக நெருங்கினான்,


ஜீவா தனது எஸ்.எல். ஆரால் சுட்டுக் கொண்டேயிருந்தான்.


"கடைசி ரவை இருக்கும் வரை நாங்கள் சண்டையிடுவோம்... எம்மைப்பற்றி எதுவும். யோசிக்க வேண்டாம்..." வோக்கியில் அவனது குரல் தளம்பலின்றி ஒலித்தது.


சண்டை தொடர ரவைக்கூடுகள் வெறுமையாகின.




விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code