சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி ‘கப்பல் கப்டன்’ லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 கடல் வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.
எமது விடுதலைப் போராட்டத்திற்கு அடி நாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களை கொண்டுவந்து சேர்க்கவும். அடக்கு முறையாளர்களின் தடைகளால் அல்லலுறும் எம் மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவந்து கரை சேர்க்கவும் என கடற்புலிகளின் கப்பல்கள் வையப்பரப்பிலுள்ள கடலெல்லாம் சென்று வந்தன.
“வெளியே தெரிந்ததுமாய் உள்ளே மட்டும் அறிந்ததுமாய்” அளப்பெரிய பணிகளை இந்தக் கடலோடிகள் செய்து முடித்தனர்.
உயிரைக் கூட துச்சமாக மதித்து சர்வதேசக் கடற்பரப்பின் விரிப்பில் ஒர்மமுள்ள எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் மூலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்கமுடியாத பெரும் தீயாக முளாசி எரிகின்றது.
எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் கடற்புலிகள் ஆற்றிய சாதனைகள் கால வரலாறாக விளங்கும்.
லெப்.கேணல் சுடர்ணன்
முருகானந்தம் சர்வானந்தம்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
மேஐர் தணிகைமாறன்
துரைசிங்கம் கிருபன்
மாரிசன்கூடல்,இளவாலை யாழ்ப்பாணம்
மேஐர் நவநீதன் (சிந்து)
செல்வரட்ணம் ஜெகன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
கப்டன் தூயவன்
பிரான்சஸ் சந்திரா சர்வானந்த்
திருவையாறு, கிளிநொச்சி
மேஐர் இளம்பருதி
கிருஸ்ணன் ஜெயந்தன்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
மேஐர் மேகன்
இராமச்சந்திரன் ரவிச்சந்திரன்
5ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை
மேஐர் இரும்பொறை
பேராயிரம் கரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
கப்டன் அமுதன்
ஜீவகரன் செல்வரட்ணம்
மட்டுவில் நாடு கிழக்கு, பூநகரி, கிளிநொச்சி
லெப்.கேணல் அம்பிகைப்பாலன்
தவராசா புலேந்திரன்
மூளாய், யாழ்ப்பாணம்
லெப்.கேணல் எழில் கண்ணன்
அருள்சீலன் துருசீலாஸ்
கரந்தன் நீர்வேலி யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி
மேஜர் சாருமதி
செல்வநாயகம் உமாபதி
தனங்கிளப்பு, சாவகச்சேரி -
யாழ்ப்பாணம்
கடற்கரும்புலி
லெப்.கேணல் சிலம்பரசன்
வேலாயுதம்பிள்ளை ஜெயரஞ்சன்
ஆழியவளை,வடகிழக்கு,யாழ்ப்பாணம்
0 கருத்துகள்