Ad Code

Recent Posts

நீ அழைத்து வந்தவர்தான் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் !

நீ அழைத்து வந்தவர்தான் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன்.இது கேட்ட பின்னர்தான், எனக்கு அச்ச உணர்வே வந்தது இன்று வரை தலைவனை தொட்டு அழைத்த ஒரு காவல் அதிகாரி என்னும் சிறப்பு திரு.நந்தகுமார் அவர்களுக்கு கிடைத்துள்ளது,


வேலுபிள்ளை பிரபாகரனை கைது செய்த அன்றை நாளில் துணை ஆய்வாளராக இருந்தவர் திரு. நந்தகுமார்.அந்த நாளில் நடந்தவற்றை விளக்கினார். “யாரோ இரண்டு தரப்பு துப்பாக்கியால் சண்டையிட்டுக் கொண்டார்கள் என தகவல் வர, சில காவலர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துக் கொண்டு போனேன். சம்பவம் நடந்த அந்த ஹோட்டல் அருகில் இருந்தவர்கள், சண்டையிட்டவர்கள் அருகில் உள்ள அன்றைய நாகேஷ் தியேட்டருக்கு பக்கத்தில் உள்ள சிறிய சந்தில் இருப்பதாக சொன்னார்கள். நாங்கள் அங்கு சென்ற போது சிலர் இருந்தனர். அவர்களை அழைத்து, என்ன சண்டையிட்டுக் கொண்டீர்களா, வாருங்கள் காவல் நிலையத்திற்கு என சொன்ன உடன் எவ்வித எதிர்ப்புமின்றி வந்து விட்டனர்.

அழைத்து வந்தவர்களை காவல் நிலையித்தில் அமர வைத்த சிறிது நேரத்தில் தமிழக காவல்துறை தலைவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. என்னடா இது, எதற்கு தமிழக காவல்துறை தலைவரே அழைக்கிறாறே என நினைத்து, சொல்லுங்க அய்யா என்றேன். அவர், நீ இப்போது கைது செய்து அழைத்து வந்த நபர்கள் யாரென்று தெரியுமா? என வினவினார். நான், ஏதோ இலங்கை தமிழர்கள்-ன்னு சொன்னார்கள் சார், என்றதும், நீ அழைத்து வந்தவர்தான் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் – இது கேட்ட பின்னர்தான், எனக்கு அச்ச உணர்வே வந்தது. அதன் பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் உங்களிடம் ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா என கேட்க, அவர்கள் வைத்திருந்த பிஸ்டலை எடுத்து அமைதியாக கொடுத்தனர். அதனை வாங்கி வைத்து கொண்டோம்.

பின்னர் நினைத்தோம், கைது செய்யப்பட்டவர்கள் தங்களது பிஸ்டலால், ஒரு முறை சுட்டிருந்தாலும், நாங்கள் கைது செய்யாமல் ஓடியிருப்போம். ஆனால், மிக அமைதியாக பெருந்தன்மையோடு அவர்கள் நடந்து கொண்டதை இன்று நினைத்தாலும், பெருமையாகவும், அவர்கள் மீது ஒரு உயர்ந்த மதிப்பும் வருகிறது. அதுபோல், நான் கைது செய்தேன் என நினைக்கும் போது வருத்தமாய் உள்ளது.”


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Comments


 

Ad Code