Ad Code

Recent Posts

எனது பெயர் கார்திகை பூ

எனக்கோ பல பெயர்கள் உண்டு...
காந்தள் அக்கினி கலசம் என பல நாமங்கள் உண்டு...
பண்டைய காலத்திலே எனக்கு மதிப்பு அதிகமாம்...
போர் கடவுளாம் முருக பெருமானின் மலரும் கார்த்திகைப் பூவே...
கரிகாலன் கரங்களில் மலர்ந்ததும் காந்தள் பூவே...
நான் ஒற்றை விதை தாவரத்தில் இருந்து பிறந்தவள்...
இலை நுணிகள் நீண்டு சுருண்டு பற்று கம்பிகள் போல் படர்ந்து விரிவேன்...
நான் அகள் விளக்கு போல் ஆறு இதழ் கொண்டு காட்சி கொடுப்பேன்... 
வெண்காந்தள் செங்காந்தள் என்றும் வர்ணிப்பார்கள்...
தீச் சுவாலை போல் காட்சியளிப்பதால் அக்கினி கலசம் தலைச்சுருளி என்றும் அழைப்பார்...
நான் வலைந்து பற்றுவதால் கோடல் கோடை என்றும் செல்லமாக அழைப்பார்...
வைத்தியர்கள் என்னை வெண் தோண்டி என்று கூறுவார்...
நான்கு விரல் போலவும் சுடர் போலவும் காட்சி கொடுப்பேன்... 
தமிழீழ தேசிய தலைவர் அவர்களால் நான் போற்றப்பட்டேன்...

எனக்கென்று ஒரு நாடு உண்டு...
கொடி உண்டு ...
தேசிய கீதம் உண்டு...
தலைவன் உண்டு...
மக்கள் உண்டு...

இப்படி என்று பல கெளரவிப்புகளுடன் தமிழீழத்தில் அவதரித்தேன்.... 
என்னை தமிழீழத்தின் தேசிய மலராக பிரகடணப் படுத்தப்பட்டது... 
நான் தேசிய கொடியின் வர்ணங்களை ஒத்தே இருக்கின்றேன்...
நான் பூக்களில் காந்தள் பூவாக பிறந்ததிற்கு பெருமை கொள்கின்றேன்...
மாவீரர் செல்வங்களின் கல்லறைகளை பூஜிப்பதில் பெரும் பாக்கியம் அடைவேன்...

ஆக்கம் -: சுசி

Image Hosted by ImageShack.us

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code