Ad Code

Recent Posts

லெப்.கேணல் ஆண்டான்/சசிகரனின் வீர வரலாற்று நினைவுகள்

லெப்.கேணல் ஆண்டான்/சசிகரன்

முத்துக்குமார் சதீஸ்குமார்

தமிழீழம்: யாழ் மாவட்டம் 

தாய் மடியில்:02.08.1975

தாயக மடியில்:05.06.2000


05.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அவ்விநியோகப்படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்த வேளையில்  

லெப் கேணல் ஆண்டான் தலைமையிலான சண்டைப்படகுத் தொகுதி மீது இலங்கைக் கடற்படையினரின் டோறாப்படகுகள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அம்மறிப்புத் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியும் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடனும்  லெப் கேணல் ஆண்டான் மறிப்புச் சமரை நடாத்திக் கொண்டிருக்க இவர்களுக்கு உதவியாக லெப் கேணல் பகலவன்  மேஐர் ஆழியன் மற்றும் கடற்கரும்புலி லெப் கேணல் அமுதசுரபி ஆகியோர்களின்  வழிநடாத்தலில் ஒரு முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர்.


இத் தாக்குதலுக்கு உதவியாக மேலதிகமாக திருகோணமலையிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்து வந்த டோறாப்படகுகள் மீதும் உக்கிர மோதல்கள் ஆரம்பிக்க ஒருகட்டத்தில் டோறாப் படகொன்று கடற்புலிகளின் சுற்றிவளைப்புக்கள் வந்து வசமாக மாட்டிக்கொண்டது .


இதைக் கட்டளைமையத்திலிருந்து ராடர் மூலம் அவதானித்த சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆக்ரோசமான கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்த கடற்புலிகள் கடுமையாக போரிட்டு அவ்டோறாவை கனரக ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி மூழ்கடித்தனர். 


தொடர்ந்த மோதலில் கடற்படையினருக்கு உதவியாக விமானப்படையினரும் தாக்குதல்களைத் தொடுத்தனர்.இவைகளுக்கும் மத்தியில் நடைபெற்ற  கடும் கடற்சமரில்  மற்றொரு டோறா சேதமடைந்து நிற்க அவ்டோறாமீது தாக்குதல் நடாத்தி மூழ்கடிக்கமுற்பட்டவேளையில்

லெப்.கேணல் ஆண்டான் உட்பட சிலபோராளிகள் வீரச்சாவடைய ஏனைய சண்டைப்படகுகள் ஆண்டானின் சண்டைப்பகை மீட்டு தளம் திரும்பினர்.


ஆறு மணித்தியாலயமாக இடம்பெற்ற இவ் வெற்றிகரச் சமரில்.

  •  லெப் கேணல்  ஆண்டான்.
  • மேஐர் அமுதப்பிரியா.
  • மேஐர்  மதிவண்ணன்.
  • மேஐர்  மருதா.
  • கப்டன்  சோபனா.
  • கப்டன் சத்தியரூபி.
  • கப்டன்  இளஞ்சேரன்.
  • கப்டன் குயில் மாறன்.
  • கப்டன்  தேசிகா.
  • லெப்டினன்ட் மதிவதனன்.
  • லெப்டினன்ட்  குட்டிக்கண்ணன்.
  • 2ம் லெப்டினன்ட்  கலைமுகிலன்.
  • வீரவேங்கை மதியழகன்

ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

 எழுத்துருவாக்கம்..சு.குணா




தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த லெப்.கேணல் ஆண்டான் உட்பட வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும்  வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். 

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code