Ad Code

Recent Posts

லெப்.கேணல் கங்கையமரன் வீர வரலாற்று நினைவு

லெப்.கேணல் கங்கையமரன்
அந்தோனி ஜோன்சன்
எழில்நகர், பனங்கட்டிக்கொட்டு, 
மன்னார்
வீரப்பிறப்பு: 02.02.1966
வீரச்சாவு: 29.06.2001

நிகழ்வு: கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் படையினரின் கிளைமோர்த்தாக்குதலில் வீரச்சாவு

துயிலுமில்லம்: முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

கடற்புலிகளின் தொடக்க காலம் முதல் கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப். கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடத்தியவர் என்பதும் விடுதலைப் போராட்டத்திற்கு அயராது உழைத்து கடற்புலிகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் துணையாக திகழ்ந்தவர்.


தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி பின்னைய நாட்களில் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையில் பல கலங்களை தாக்கி பல சாதனைகளை அதன் தலைநகரிலும் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code