தமிழீழ வைப்பகம் 1994 மே மாதம் 23 ஆரம்பிக்கப்பட்டது. கலியுகத்தில் காவலாளிகளின் பாதுகாப்பு இன்றி ,சி சி டிவி ஏதும் இன்றி எந்த கொள்ளையும் இன்றி இயங்கிய ஒரே வங்கி தமிழீழ வைப்பகம் தான்.
1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ வங்கி முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்கள் வரையும் தமிழீழ மக்களுக்கான சேவையை வழங்கியது.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி அதில் முக்கிய பொருளாதார கூறாகிய வங்கியை நடத்தினர்.அதற்க்கு தமிழீழ மக்களிடம் நல்ல ஆதரவு இருந்ததோடு மட்டுமல்லாமல் உலக ஊடகங்களும் அதைப்பற்றி எழுத தொடங்கின.
வங்கி ஆரம்பிக்கப்படும் போது யாழ்ப்பாணமே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாக நகராக இருந்தது.பின்னர் வன்னி பெரு நிலப்பரப்பை நோக்கி நகரும் போது தமிழீழ வைப்பகமும் கிளிநொச்சியுக்கு நகர்ந்தது.
2005 A.F.P சர்வதேச செய்தி நிறுவனம் தமிழீழ வைப்பகம் பற்றி புகழாரம் சூட்டி இருந்தது.இது சர்வதேசம் புலிகளின் நடைமுறை அரசு மீது,குறிப்பாக புலிகள் சர்வதேச ரீதியாக இருந்த பொருளாதார சதிகளுக்குள் சிக்காமல் தம் நிதி நிருவாகங்களை வளர்த்தெடுத்து கொண்டு வந்ததை கண்டு பொறாமை பட்டது என்பதை சில சர்வதேச செய்திகள் அன்று எமக்கு உணர்த்தின.
குறிக்கோள் தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத் தாயகத்தில் மட்டுமன்றி தாயகத்துக்கு வெளியேயும் வெளிப்படுத்தி நிற்கும் வைப்பகப் பணியில் மக்களனைவரையும் தன்னுடன் இணைப்பதைத் தொலைநோக்காகக் கொண்டு செயற்படுகின்றோம்.
பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப் பற்றாக்குறையால் பிறந்த தேவைகளும், ஒட்டு மொத்தத்தில் சுயசார்புப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எமது மக்களுக்கு நன்கு உணர்த்தின.
தன்னிறைவான – தன்னில் தானே தங்கி நிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம்.
தமிழீழ வைப்பகம்
Bank of Tamil Eelam
தன்னிறைவான – தன்னில் தானே தங்கி நிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம் எனும் மேதகு தேசியத்தலைவரின் சிந்தனையில் உதயமானது.
“தமிழீழ வைப்பகம் தமிழரின் காப்பகம்” என்னும் தொலை நோக்குச் சிந்தனையோடு தமிழீழத்தில் 1994 ஆம் ஆண்டு வைகாசி 23 இல் உத்தியோக பூர்வகமாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழீழ வைப்பகத்தின் கிளைகள்
🟥யாழ்ப்பாணம் 23-05-1994
🟥கிளிநொச்சி 05-06-1995
🟥நெல்லியடி 14-09-1995
🟥முல்லைத்தீவு 14-05-1996
ஊரகக் கிளைகள் ஆரம்ப நாள்
🟥மாங்குளம் 07-07-1997
🟥விசுவமடு 01-06-2001
🟥புளியங்குளம் 24-07-2002
🟥பளை 14-03-2003
🟥முழங்காவில் 14-01-2004
மேலும் மல்லாவி, பூநகரி போன்ற இடங்களிலும் சில கிளைகள் இருந்தன. எனினும் அவை திறந்து வைக்கப்பட்ட சரியான திகதி கோப்பில் இன்மையால் அவற்றை பதிவு செய்யவில்லை
பணிகள்
🔶️️நிலையான வைப்புகள் Fixed Deposits
🔶️️தேட்ட வைப்புகள் Savings Deposits
🔶️️நடைமுறைக் கணக்குகள் Current Accounts
🔶️️தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates
🔶️️ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits
🔶️️வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange
கடன்கள் Loans
🔷️மேலதிக வரைவுகள் Overdrafts
🔷️நகையடைவு Pawn Broking
🔷️காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities
🔷️வாடகைக் கொள்வனவு Hire Purchase
🔷️நிலையான கட்டளைகள் Standing Orders
🔷️பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service
🔷️நிலையான வைப்புத்திட்டங்கள்
Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
🔴24 மாத நிலையான வைப்பு 08.50 %
🔴12 மாத நிலையான வைப்பு 08.00 %
🔴06 மாத நிலையான வைப்பு 07.00 %
🔴03 மாத நிலையான வைப்பு 06.00 %
🔴24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 %
🔴12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
🔴24 மாத நிலையான வைப்பு 07.50 %
🔴12 மாத நிலையான வைப்பு 07.00 %
🔴24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
🔴12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %
தாயகத்தில் வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
🔴24 மாத நிலையான வைப்பு 07.50 %
🔴12 மாத நிலையான வைப்பு 07.00 %
🔴24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
🔴12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %
தேட்ட வைப்புத்திட்டங்கள்
Savings Deposit Schemes
தேட்ட வைப்புத் திட்டங்கள் வட்டி வீதம்
🔴வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
🔴சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50%
🔴நல்லைத் தேட்டம் 06.00%
🔴நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50%
🔴சிறார் உண்டியல் திட்டம் 06.50%
🔴ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
🔴அமுதம் சிறார் தேட்டம் 06.50%
🔴பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50%
கடன் திட்டங்கள்
Loan Schemes
கடன் திட்டங்கள் வட்டி வீதம்
🔴நகையடைவுக் கடன் திட்டம் 18.00%
🔴வாணிபக் கடன் திட்டம் 16.00%
🔴மேம்பாட்டுக் கடன் திட்டம்
🔴வேளாண்மைக் கடன் திட்டம் 15.00%
🔴கடற்றொழில் கடன் திட்டம் 15.00%
🔴கைத்தொழில் கடன் திட்டம் 15.00%
🔴சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00%
🔴சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00%
🔴கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00%
0 கருத்துகள்