19-03-1991 அன்று தொடங்கப்பட்ட இந்தப் படை நடாத்துகை 4 நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தது, மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியைத் துண்டாடும் நோக்குடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிலாவத்துறை, கொண்டைச்சி இராணுவ வலயத்தை உடைத்தெறியும் முகமாக அந்தப் போர் நடாத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வாலாற்றில் மிகப் பெரிய ஒரு போராக அமைந்துவிட்ட இச் சண்டைகளில் 79 புலிரைர்கள் வீரமரணமடைந்தனர்.
இயற்கையான தற்காப்பு நிலைகள் எதுவுமே அற்ற புவியியல் அமைப்பைக் கொண்ட இப்போர்க்களத்தில், எதிரியினது மும்முனைத் தாக்குதலையும் எதிர் கொண்டபடி போர் வியூகம் அமைத்து சாவுக்கு மத்தயில் உறுதியுடன நாம் நடாத்திய போரானது. எதிரியைத் திகைக்கச் செய்துள்ளது.
இப்படை நடாத்துகை தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் நாம் சந்தித்த வெற்றிகளையும் சொல்ல விளைகின்றோம்.
சிலாவத்துறை இராணுவ முகாம் 20-03-1991 அன்று 2ஆம் நாள் போரில் வீரமரணமடைந்தோர் விபரம்
கப்டன் மொறிஸ்
(ச. தவராசா)
வரணி,யாழ்ப்பாணம்
லெப் ஜொனி
(ச. சக்திவேல்)
புலோலி யாழ்ப்பாணம்
2வது லெப்.ரஞ்சித்தாத்தா
(க.குணபாலசிங்கம்)
பளை, யாழ்ப்பாணம்.
2வது லெப் அன்ரனி
(து. அகிலன்)
யாழ்ப்பாணம்.
சிவசங்கர்
(இராசேந்திரகுமார்)
நாவாந்துறை. யாழ்ப்பாணம்.
சிவாகரன் (தா.யோசப்சாள்ஸ்)
அடம்பன் மன்னார்.
லெப் நாதன்
(தி. சிவானந்தன்)
பளை, யாழ்ப்பாணம்
2வது லெப் சுதா
(தே. மேரிகிழாரா)
வல்வெட்டித்துறை. யாழ்ப்பாணம்.
2வது லெப் அம்பி
(நா. கனகரஞ்சன்)
புத்தூர், யாழ்ப்பாணம்
ஆனோல்க்
(கி. குகன்)
இரம்பைக்குளம், வவுனியா.
மரியநாயகம்
(த. சின்னத்துரை)
புங்குடுதீவு, வாழ்ப்பாணம்.
டெனின் வன்னி
விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
0 கருத்துகள்