Ad Code

Recent Posts

உலக தமிழினத்தையே நேசித்த தலைவன்.

மேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன் !!!

இன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவனாக உள்ள அந்த தலைவனை, நேரில் பார்த்தவர்கள் மிக மிக சொற்பமானவர்களே.


இனத்துக்கு ஒரு இழுக்கென்றால் இனம் காக்க தன் உயிரையும் துச்சமென தூக்கி எறிய துணியும் தமிழன் என்ற வீரமிக்க இனமொன்று இந்த உலகில் உள்ளது, அந்த இனம் ஒருபோதும் பகைவன் காலில் வீழ்ந்து மண்டியிட்டு வாழாது என்ற வரலாற்றை உலகிற்கு உணர்த்திய அந்த தலைவனை தமிழ் இனத்தின் வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

மேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழ்த்தப்படும் மக்களுக்கான உரை, ஆனால் அந்த 35 நிமிட உரையில் அடுத்த ஒரு வருடத்தில் அந்த மண்ணில் நிகழப்போகும் அரசியல், பொருளாதார, இராணுவ மாற்றங்கள் போன்றவற்றை மிக துல்லியமாக எடைபோட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமே அந்த தலைவனின் தனி சிறப்பு .

தன்னைப்பற்றி எப்போதும் ஊடகங்கள் பேசவேண்டும் என்றோ, மக்கள் தனது புகழை போற்ற வேண்டுமென்றோ அந்த தலைவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அந்த தலைவனை பேட்டி காண விரும்பிய போது அந்த தலைவன் கூறிய பதில் அற்புதமானது. ” நான் பேச்சுக்கு வழங்குவது குறைந்த அளவு முக்கியமே, நாம் செயலால் வளர்ந்த பின்னே நாம் பேச ஆரம்பிக்க வேண்டும்.

வாய்ப்புகள் பல இருந்தும், அந்த தலைவன் தனது நாட்களை பலஅடுக்கு வீடுகளிலோ, AC அறைகளிலோ கழித்ததில்லை,. இருள் சூழ்ந்த அடர்ந்த காடுகளில் கடினமான வாழ்க்கையினையே அந்த தலைவன் இறுதி வரைக்கும் வாழ்ந்திருக்கின்றார் .

முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி வாயில் எச்சில் ஊற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களுக்கு மத்தியில் தேடி வந்த முதலமைச்சர் பதவியையும், கோடிக்கணக்கான பணங்களையும் துச்சமென தூக்கி எறிந்து தமிழர்களின் விடிவுக்காகவே தனது வாழ்நாளை கழித்தவர் அந்த தலைவர்.

வலிமை மிக்க ஒரு முப்படைகளை கொண்ட மரபு ரீதியான இரானுவத்தினையே தன் பின்னால் வைத்திருந்து, உலக வல்லரசுகள் பலவற்றிற்கு சிம்மசொப்பனமாகவும், சுதந்திரம் வேண்டி போராடும் போராட்ட இனங்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கும் அந்த தலைவன் வேறு யாருமல்ல தமிழன் என்ற தனிப்பெரும் இனத்தின் வீரத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் உலகமெங்கும் முழங்கச் செய்த தேசிய தலைவர் மேதகு வே. பிராபகரன் அவர்கள் தான் அந்த தலைவர்.






இன வீரம்,இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளமாக இன்று வரைக்கும் வாழும் நம் பிரபாகரன் அவர்களை நம் தலைவராக பெற்றதே இந்த ஜென்மத்தில் நாம் பெற்ற அதி உச்ச சிறப்பாகும்.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Comments


 

Ad Code