Ad Code

Recent Posts

மரித்துவிடவில்லை தமிழ் மறவன்.


தோழா தோள் கொடு 
தோல்வியை தோற்கடி 
என் குருதி இன்னும்
காயவில்லை
தமிழும் சோரம் 
போகவில்லை

விதையாய் விழுந்திருக்கிறேன் 
சதைகள் தான் அழியும் -நம் 
சரித்திரம் அழியாது 
உடல்கள் தான் புதையும் 
தமிழ் உணர்ச்சிகள் 
புதையாது

காலம் நம்மை ஏமாற்றியது 
கருத்துகள் மாறாமல் 
வேரூன்றியது 
மண்டியிட்டு மடிபவரல்லர் நாம் 
மார் கிழித்து  ஏந்தினோம் 
உன் துரோகத் தோட்டக்களை

புண்கள் நமக்குப்
பண்பட்டுப் போனவை 
புதைகுழிகள் நமக்குப் 
பண்பாட்டுப் பேரவை 
நம் வீட்டு முற்றங்கள் கூட
வீரங்கள் விளைபவை

கல்லறை முன் ஏன் கலங்குகிறாய் 
முடிந்தால் கதவு வைத்துச் செல் 
கல்லறைக்குள்ளும் 
துடித்துக்கொண்டிருக்கின்றன - நம் 
கரங்கள் துப்பாக்கி ஏந்தி - கேளாய் 
மரித்து விடவில்லை தமிழ் மறவன்.



Image Hosted by ImageShack.us

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code