Ad Code

Recent Posts

ஒரு மானங் கெட்ட நாடு இந்தியா.

Sri Lankan President Mahinda Rajapaksa, left, shakes hands with Indian Prime Minister Manmohan...
இன வெறியர்கள்.
ஒரு மானங் கெட்ட நாடு.
போரில் இறந்த எதிரியின்
உடலைப் புணரும் பேய்களின்
நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது
ஒரு மானங் கெட்ட நாடு.

பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச்
சொல்லிக் கொல்லும் காட்டேரிகளின் நாட்டின்
தேசிய ஒருமைப்பாட்டைப பேணுகிறது
ஒரு மானங் கெட்ட நாடு.

நாளொன்றில் இருபதாயிரம் பேர் கொன்ற
நாய்களின் நாட்டிற்கு ஐநா மன்றில்
பராட்டுத் தெரிவித்து மகிழ்ந்தது
ஒரு மானங் கெட்ட நாடு.

தாயின் முன் மகளைக் கெடுத்து
தாயைக் கொல்லும் நாய்களின்
நாட்டுக்கு உதவி பல செய்கிறது
ஒரு மானங் கெட்ட நாடு.

தன் மீனவரை கொல்லும் பாவிக்கு
செங்கம்பள வரவேற்பளித்து
பெருமை தேடிக் கொண்டது
ஒரு மானங் கெட்ட நாடு.

இன வெறிய பிசாசுகள்.
பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code