Ad Code

Recent Posts

கப்டன் பாண்டியன் (புருஸ்லி) வீர வரலாற்று நினைவுகள்

கப்டன்
 

பாண்டியன் (புருஸ்லி)

துரைசிங்கம் கிருஸ்ணகுமார்

வடலியடைப்பு, பண்டத்தரிப்பு

யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 09.07.1972

வீரச்சாவு: 23.07.1991


நிகழ்வு: புல்லாவெளிப் பகுதியிலிருந்து ஆனையிறவை நோக்கி முன்னேற முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு 


அந்தச் சிறுவன் தானும் ஓட வேண்டுமென்று அடம் பிடித்தான். அது நீண்ட தூரம் ஓடும் மரதன் ஓட்டப் போட்டி. பிரபல ஓட்ட வீரர்கள் பலர் கலந்து கொள்ளும் அந்த நிகழ்ச்சியில் எப்படி இந்த எட்டு வயதுச் சிறுவனை ஓட விடுவது...? என்று அந்தப் போட்டினை ஒழுங்கு செய்த சனசமூக நிலைய நிர்வாகிகள் தயங்கி நின்றார்கள். ஆனால் சிறுவனோ ஓட வேண்டுமென்று பிடிவாதமாக நின்றான். இறுதியில் "உனது அப்பா அல்லது அம்மாவை அழைத்து வா அவர்கள் சம்மதித்தால் ஓட விடலாம்" என்று சொல்லி சிறுவனை அனுப்பினார்கள். 


அவனோ தன் தாயை அழைத்து வந்து அனுமதி பெற்று மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டான். மரதன் ஓட்டம் என்றால் நீண்ட தூர ஓட்டம். சாதாரணமாக நிறையப்பேர் ஓட ஆரம்பிப்பார்கள். களைத்து இடையில் நிற்பவர்கள் தான் அதிகம். முழுத்தூரத்தையும் ஓடி முடிப்பது என்பதே பெரிய விடயம். பிரபல ஓட்டவீரர்கள் பலருக்கு முன்பாக ஊரே வியக்கும் வண்ணம் அந்தச் சிறுவன் நான்காவதாக ஓடி முடித்தான். 


ஊரிலுள்ள கடைக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து அந்தச் சிறுவனுக்கு சிறப்புப் பரிசு வழங்கிக் கெளரவித்தார்கள். இந்தச் சிறுவன் பின்னாளில் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த மாவீரனாக வருவான் என்பதை எவரும் சிந்திக்கவில்லை. அவன் வேறு யாருமில்லை... அவன்தான் மாவீரன் கப்டன் பாண்டியன்.


பண்டத்தரிப்பு பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் பாண்டியன். இவன் துரைசிங்கம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தான். சிறுவயதிலேயே தன்னை இயக்கத்தோடு இணைத்துக் கொண்டவன். இயல்பாகவே விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினான். குறிப்பாக ஓட்டப் இவன் பெற்ற பரிசுகள் ஏராளம் இயக்க பயிற்சிகளில் கூட நீண்ட தூரம் ஓட்டத்தில் இவன்தான் முதலாவதாக வருவான். 


இயக்கத்திற்கு போவதற்காக கராட்டி கற்றுக் கொண்டான். இதனால் தலைமயிரைக் கட்டையாக வெட்டி, புறூஸ்லி மாதிரியான அசைவுகளை பாவனைகளை செய்து காட்டுவான். இதனால் இப்பகுதி மக்கள், இவனது நண்பர்கள் எல்லோரும் "புறூஸ்லி" என்றே அழைத்தார்கள்.


சாவகச்சேரியில் தனது பயிற்சியை முடித்த பாண்டியன், அந்தக் காலகட்டத்தில் பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, சுழிபுரம் பகுதிப் பொறுப்பாளராக விளங்கிய மேஜர் பிரசாத்தின் கீழ் அரசியல் வேலைகள் செய்து வரலானான். எந்த நேரமும் கலகலப்பாக சிரித்தபடியே வேலைகள் செய்வது இவனது பழக்கம். எந்த ஒரு சூழ் நிலையிலும் தனது பகிடிக் கதைகளால் கலகலப்பை ஏற்படுத்தக் கூடியவன். இதனால் இப்பகுதி மக்கள் இவனில் அன்பைப் பொழிந்ததில் ஆச்சரியமில்லை. 


இந்திய இராணுவ கால கட்டத்தின்போது இவன் பண்டத்தரிப்பு, சித்தங்கேணி பகுதிகளில் அரசியல் வேலைகளில் ஈடுபட்டான். இவனைப் பிடிப்பதற்கு இந்திய இராணுவம் நாயாய் அலைந்தது. வாகனங்கள் சகிதம் தேடித்திரிந்தனர். பொதுமக்களிடத்திலெல்லாம் 'பாண்டியன் எங்கு நிற்கிறான்' என்றெல்லாம் விசாரித்தார்கள். இவர்கள் ஏன் இப்படி அலைந்தார்கள்...? எல்லாம் தங்கள் பதவிகளையும் ஊதியங்களையும் உயர்த்துவதற்காகவே. ஒரு முறை பாண்டியனுக்கு நல்ல பசி. தனது வீட்டிற்குச் சென்று சாப்பிட அமர்கிறான். களைத்து விழுந்து வந்த மகனுக்கு உணவு பரிமாற தாயார் ஆவலுடனும் பரிவுடனும் வந்தபோது ஏதோ இரைச்சல் சத்தம் கேட்டது. பாண்டியன் உணர்ந்து கொண்டான். கூர்மையாக என்ன சத்தம் என்று அவதானிக்கலானான். டில் வீட் வானொலிப் பெட்டி பாடிக்கொண்டிருந்ததால் மற்றவர்களுக்குச் சத்தம் கேட்கவில்லை. பாண்டியன் மெதுவாக எழுந்து பின்பக்க வாசல் கதவை அணுகினான். எட்டிப் பார்த்தான். காக்கியுடுப்பில் பல பேய்கள் வாகனத்திலிருந்து குதித்தன.


அந்த நேரத்தில் இவன் ஏதாவது செய்திருந்தால் அந்தப் பேய்கள் நிறையப் பொதுமக்களைச் கொன்றிருப்பார்கள். எனவே மரதன் அனுபவம் இவனுக்கு கைகொடுத்தது. இராணுவம் இவனது வீட்டை சுற்றி வளைக்க முன்பு இவன் பாதுகாப்பான இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.


இதற்குப் பின்னர் ஒரு முறை இயக்க சுவர் ஒட்டிகளை ஓட்டிக் கொண்டு வந்துகொண்டிருந்தான். இன்னும் சில இடங்களில் ஓட்டுவதற்கு என சில சுவரொட்டிகள் சைக்கிளின் பின்பக்க கரியலில் கிடந்தது. பசைவாளி முன் கான்டிலில் தொங்கியது. பண்டத்தரிப்பிலுள்ள திருப்பம் ஒன்றால் திரும்பினான். எதிரில் இந்திய இராணுவம் துப்பாக்கி சகிதம் நின்றிருந்தது. சைக்கிளை கொண்டு வளைத்துக் வந்தவழியே திரும்பி விரையலானான். இந்திய இராணுவம் கலைத்துக் கலைத்துச் சுட்டது. 


இவனது எல்லாப் பக்கத்திலும் ரவுண்ஸ் உரசிக் கொண்டு போனது. ஆனால் எதுவும் இவனுக்குப் படவில்லை. பத்திரமான இடத்துக்குப் போய் நின்று தனது சைக்கிளைப் சுவரொட்டிகள் பார்த்தான். ரவைகள் பட்டு பிய்ந்து போய் இருந்தன. சைக்கிளின் பாரிலும் பின்பக்க கரியலிலும் ரவை கன் கோலம் போட்டிருந்ததை தான். அவதானித்தான். இந்த முறை மயிரிழையில் உயிர் தப்பியதை உணர்ந்தான் 


இதற்கு ஒரு வாரத்துக்குப் பின்பு வடலியடைப்பு பகுதியில் பாண்டியன் சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்த போது எதிரும் புதிருமாக இந்திய இராணுவம் வந்துவிட்டது. இந்த முறை அவனால் தப்பமுடியவில்லை -வயிற்றில் சில வெடிகளுடன் கீழே சரிந்தான் மயக்கமானான் இவனைப் பிடிப்பதற்கு இந்திய இராணுவம் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் கடைசியில் சுட்டுக் கைது செய்தது. -கண் திறந்து பார்த்தால் இந்திய இராணுவ முகாம். அதன் பின்பு காங்கேசன்துறை தடுப்பு முகாம் இவன் சிறையில் வாடினான். சுதந்திரத்தை நாடி நின்றவனை சிறைச்சாலை என்ன செய்யும்? இங்கு கைது செய்த எல்லோரையுமே இந்திய இராணுவம் மனிதர்களைப் போல் நடத்தவில்லை. விலங்குகளைப் போலவே நடத்தினார்கள், துன்புறுத்தினார்கள், சித்திரவதை செய்தார்கள். எவ்வாறெல்லாமோ செய்து இந்திய இராணுவம் தனது என மன வக்கிரங்களைத் தீர்த்துக் கொண்டது. உளவியல் ரீதியாக கைதிகளை பாதிப்படையச் செய்தார்கள். 


இதனால் தமது விடுதலை உணர்வை இவர்கள் இழப்பார்கள் என நம்பினார்கள். ஆனால் இந்திய இராணுவம் எதிர்பார்த்ததிற்கு மாறாக உருக்கு போன்ற உறுதியும், போராட வேண்டுமென்ற ஆவேசமும் அங்கு வளர்ந்தது. இப்படித்தான் பாண்டியனையும் சிறைச்சாலை ஒரு முழுமையான போராளியாக்கியது. அவனது உறுதியும், ஆவேசமும் தாய் நாட்டின் மீதான பற்றும் அவனுக்கு மேலும் மேலும் வளர்ந்தது. இந்திய இராணுவத்தின் பிடியிலிருந்து விடுபட்ட பின்னர் தொடர்ந்தும் போராளியாக அதிவேகமாக இயங்கினான்.


மண்டை தீவு சண்டையில் இவன் தப்பி வந்ததே பெரிய பாடாக இருந்தது. மண்டை தீவினை எல்லாப் பக்கமும் இராணுவம் சுற்றி வளைத்து விட்டார்கள். கடற்கரைப் பக்கத்தால் பீரங்கிப் படகுகள் சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டிருந்தது. இரண்டு கெலிகளும், பொம்மர்களும் தமது இரையைத் தேடும் பருந்துகள் போல வானிலே தேடின. வட்டமிட்டுத் பின்னுதைப்பற்ற பீரங்கியின் மூலம் செல்களை கண்மூடித்தனமாக அடித்தவண்ணம் இராணுவம் நெருங்கியது. இவனுக்கு காலில் காயம். தனது தோழர்களுடன் மண்டை தீவு புறக்கடலுக்கு போய் அங்கிருந்து சிறுத்தீவுக்கு வந்து ஒருவாறு குருநகரை அடைந்தான்.


வெற்றிலைக் கேணியில் தரையிறங்கிய இராணுவத்தினர், ஆனையிறவை நோக்கி முன்னேறலாயினர். இவர்களை இடை மறிப்பதற்காக மேஜர் பவா தலைமையில் படைப்பிரிவொன்று பலாலியில் இருந்து புறப்பட்டது. இப்படைப் பிரிவை அனுப்பும் ஒழுங்கை தான் நின்று செய்து கொண்டிருக்கும் பொழுது என்னிடம் பாண்டியன் வந்தான். "எல்லோரும் ஆனையிறவுக்கு போகினம் நாங்கள் போறதில்லையோ" என்று கேட்டான். "யாழ்ப்பாணத்திற்குள் இறங்கினால் யார் பார்க்கிறது? நாங்கள் தானே. அதனால் கொஞ்சம் பொறு". என்று அவனை சமாதானப் படுத்தினேன். "எப்படியும் நாங்கள் ஆனையிறவுக்குப் போக வேணும்" என்று அடம் பிடித்தான். கோட்டை, மாங்குளம், பலாலி, தச்சன்காடு, தீவு என்று எல்லாச் சண்டைக்கும் போனனான். இதுக்கும் கட்டாயம் போகவேண்டும் என்றான். "எங்களுக்கு அறிவித்தல் வரும்போது வெளிக்கிடுவம்" என்று கூறி ஒருமாதிரி அவனை சமாளித்தேன். ஏற்கனவே கோட்டை, மாங்குளம், தச்சன்காடு, மண்டைதீவு ஆகிய இடங்களில் சண்டையிட்டு வீரவடுக்களை பாண்டியன் பெற்றிருந்தான். அதன் பின் யுத்தத்திற்கு எல்லோரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். பாண்டியனும் 'தனது படைப்பிரிவை சரிபார்த்துக்கொண்டான். 


ஒவ்வொருவராக ஒவ்வொரு குழுவாக எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு என்னிடம் வந்தான். எல்லாம் சரியண்ணை இனி வெளிக்கிடுறது தான் பாக்கி" என்றான். "சரி எல்லோரும் வெளிக்கிடுங்கோ" என்று கூறிவிட்டு புறப்பட்டேன். பாண்டியன் கையில் ஒரு வோக்மனை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். சில நாட்களாகவே வோக்மன் ஒன்றை வைத்து இயக்கப் பாடல்களை பாண்டியன் கேட்டுக்கொண்டிருந்ததை அவதானித்திருந்தோம். ஆனால் சண்டைக்குப்போகும் பொழுது ஏன் வோக்மன்? என் மனதில் வினா எழுந்தது. "நாங்கள் என்ன அடிபடப்போறோமோ அல்லது பாட்டுக் கேட்கப் போறோமோ~ என்றொரு போராளி பாண்டியனை மறித்துக்கேட்டான். இவன் என்ன பதில் சொல்லப்போறான் என்று நான் ஆவலுடன் காத்திருந்தேன். 


"மச்சான்.. அடிபடக்கே சந்தோசமாக அடிபடவேணும் ..சும்மா டென்சனாக இருக்கக் கூடாது. அப்பதான் ஆமி ஓடுவான்.. " என்றான் பாண்டியன். "இங்கே கொண்டு வா அதைப்பார்ப்பம்" என்று கேட்டு அந்த வோக்மனை வாங்கினேன். அதன் பாடும் (Play) பட்டனை அழுத்தியபோது "எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகின்றோம்" என்று அது பாடத்தொடங்கியது. சிலாபத்துறை சண் டையின் போது இதே பாடலை பாடியபடியே மேஜர் ரஞ்சன் இராணுவ முகாமுக் குள் புகுந்தது எனக்கு நினைவுக்கு வந்தது.


எங்கும் ஒரே நிசப்தம். அங்கு இருந்த பற்றைகளோ மிகக் குறைவு. இருந்தவையும் செல்களாலும் பீப்பாக் குண்டுகளாலும் அரைவாசி கருகியும் சில அரைகுறைப் பச்சையாகவும் காட்சியளித்தன. அப்பிரதேசத்தில் இருந்தவையோ சில பனைமரங்கள். அவற்றிலும் ஐம்பது கலிபர் தொடக்கம் எல்லா வகையான ரவையாலும் கோலம் போடப்பட்டிருந்தன.


நாங்கள் வந்த பாதை நெடுகவும் செல்களால் விதைக்கப்பட்டு அதன் எஞ்சிய 'புறப் பலர்கள்' மட்டும் ஏராளமாக கிடந்தன. அங்கு பறவைகளோ விலங்குகளோ எதுவுமே இருக்கவில்லை. எப்படி அவை இருக்கும்...? இராணுவப் பேய்களும் நாங்களும் மட்டுமே நின்றோம். எமது காவல் அரண்களுக்குப் போகும் பாதையைப் பார்த்தேன். கானல் நீர் தெரிந்தது... அனல் பறக்கும் வெய்யில், வியர்வை வெள்ளமாக வடிய தாகம் தொண்டையை வறட்டியது. ஆம் நாம் பாலைவனச் சண்டை ஓன்றில் நிற்கின்றோம்.


சற்று முன்னர்தான் இரண்டு பொம்பர்கள் குண்டுகளை வீசிக் களைத்துப்போய் சென்றிருந்தன. மேலே மீண்டும் இரைச்சல், நிமிர்ந்து பார்த்தால் 'சீ பிளேன்' டேய் எல்லாரும் மறைவாய் நில்லுங்கோ இடத்தைக் காட்டிக் கொடுக்காதேங்கடா" என்று யாரோ ஒருவன் கத்தினான். வேவு பாப்பதற்காக மிக உயரமாகப் பறந்து எமது இடத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு கெலிகள் விரைந்து வந்து கொண்டிருந்தன. எமது விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுக்கு பயந்து மிக உயரத்திலேயே பறந்து தாக்குதலை நடாத்தின. இவற்றிற்கு மத்தியில் பால்ராஜ் அண்ணை அன்று பின்னேரம் நடத்த வேண்டிய தாக்குதலைப் பற்றி எல்லோருக்கும் விபரிக்கின்றார். புல்லாவெளி காவலரண்களுக்கு முன்புறமாகவும் இரண்டு பக்கவாட்டுப் பக்கமாகவும் புகுந்து அடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. பாண்டியன் தலைமையிலான குழுவே புல்லாவெளிக் காவலரண்களின் முன் பக்கமாகப் புகுந்தடிப்பது எனத் திட்டமிடப்பட்டது. தாக்குதலிற்கான ஏற்பாடுகளை முன்னின்ற சில தளபதிகள் ஏற்பாடு செய்கின்றனர்.


தொடர்ச்சி 10ம் பக்கம் பத்திரிகையின் தெளிவின்மை காரணமாக எங்களால் எல்லாம் தட்டச்சு செய்ய முடியாமைக்கு வருந்துகின்றோம்.

 



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code