Ad Code

Recent Posts

கரும்புலி மேஜர் சுதாஜினியின் வீரவணக்க நாள்

கரும்புலி

மேஜர் சுதாஜினி

தெய்வேந்திரம்பிள்ளை ஜெயசுகி இடைக்குறிஞ்சி,வரணி, 

யாழ்ப்பாணம் 

வீரப்பிறப்பு: 03.02.1976 

வீரச்சாவு: 26.03.2000

  

நிகழ்வு: 26.03.2000 அன்று ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது யாழ். பளைப் பகுதியில் ஆட்லறித் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.


ஓயாத அலைகள் – 03 படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று யாழ். பளைப் பகுதியில் சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி ஆகியோரின்  வீரவணக்க நாள் இன்றாகும் .


பளையில் 26.03.2000 நள்ளிரவு ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் வெடித்துச் சிதறி எரிவது அந்த ஆட்லறித்தளம் நிர்மூலமாகி விட்ட சேதியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தது. வானளாவ பரவிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளின் பிரகாசம் கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் வானத்தில் பிரதிபலிக்கும்படி செய்து கொண்டிருந்தன. அந்த வீரமிகு சாதனையை நிகழ்த்தி விட்டு காவியமாகினர் இரண்டு கருவேங்கைகள்.


கரும்புலி

மேஜர் தனுசன்(மாருதியன்)

தங்கராசா இலங்கேஸ்வரன் 

இறால்குழி,மூதூர், 

திருகோணமலை

வீரப்பிறப்பு: 25.11.1979 

வீரச்சாவு: 26.03.2000


நிகழ்வு: 26.03.2000 அன்று ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது யாழ். பளைப் பகுதியில் ஆட்லறித் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.



விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Comments


 

Ad Code