Ad Code

Recent Posts

வீரவேங்கை சுஜாத் வீர வரலாற்று நினைவுகள்


வீரவேங்கை சுஜாத் 
நடராசா குமரகுருநாதன்

குரும்பசிட்டி, புலோலி, 

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 23.09.1971

வீரச்சாவு: 16.06.1990


நிகழ்வு: முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


குண்டு மீது பாய்ந்து புலிகளின் அணியை காப்பற்றிய வீரவேங்கை சுஜாத் ...


நள்ளிரவு...


மாங்குளம் இராணுவ முகாம் மீதான முதலாவது தாக்குதல். எதிரி தனது அரண்களில் இருந்து பொழிந்து கொண்டிருந்தரவை மழைக்கு நடுவில், புலிகள் முன்னேறினர்.


புலிகளின் அணி காவலரணுக்கு நெருக்கமாக மிக அருகில் வந்துவிட்டபோது, எதிரி கைக்குண்டுகளை வீசத்துவங்கினான். அக்கம் பக்கங்களில் விழுந்து குண்டுகள் வெடித்தன.


திடீரென 7,8 போராளிகள் இருந்த ஒரு இடத்தில், எதிரியின் குண்டு ஒன்று


அவர்களுக்கு நடுவில் விழுந்தது. திகைத்துப்போன கணம். அடுத்த விநாடிகளில் அது வெடித்து அத்தனை பேரையும் பலி எடுக்கும். சுஜாத் பாய்ந்தான். "விலத்துங்கோடா...!" 


என்று உரத்துக் கத்திக்கொண்டு முன்னால் நின்ற தோழர்களை இருகைகளாலும் தள்ளிவிழுத்தி விட்டு, குண்டின் மீது சுஜாத் பாய்ந்தான்.


அடுத்த நொடி.. தோழர்களைக்கொல்ல இருந்த குண்டின் சிதறல்களைத் தான் ஏற்ற அந்த நண்பன், அந்தத் தோழர்களின் முன்னாலேயே சிதறிப்போனான்.


தொடர்ந்தும் புலிகளின் அந்த அணி எதிரியைப் பிடிக்கும் வரை முன்னேறியது சிதறிய தங்கள் தோழனின் இரத்தக்கறைகளுடன்.

-களத்திலிருந்து 


விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணையும், மக்களையும் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! 
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code