Ad Code

Recent Posts

லெப்.கேணல் ராஜன், லெப்.கேணல் ரஞ்சன் ஆகிய இரு மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீரச்சாவடைந்த  லெப்.கேணல் ராஜன் மற்றும் லெப்.கேணல் ரஞ்சன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.



லெப்.கேணல் ராஜன் 
சோமசுந்தரம் சற்குணம் 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 
வீர்ப்பிறப்பு:11.02.1966
வீரச்சாவு :27.08.1992

புலிகளின் முதன் நிலைத் தளபதிகளுள் ஒருவரான ராஜன் இராணுவ நெருக்கடி மிகுந்த கால கட்டங்களில் திறமையாகச் செயற்பட்டு தலைவரின் பாராட்டைப் பெற்றவர்.

சக போராளிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த இவர் 27.08.1992 அன்று  யாழ் மாவட்டம் மாதகல் பகுதியில் ஸ்ரீலங்கா படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது  வீரச்சாவடைந்தார்.



லெப்.கேணல் ரஞ்சன் / மாருதியன் 
செல்லத்துரை பிராபாகரன் 
தமிழீழம் (அம்பாறை மாவட்டம்)
வீரப்பிறப்பு:13.05.1970
வீரச்சாவு :27.08.1995

27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா அதிரடி படையினருடன் ஏற்ப்பட்ட மோதலின் போது வீரச்சாவை அனைத்து கொண்டார்.




தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code